Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குண்டலினியும் தமிழ் மொழியும் -4

2 posters

Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by ram1994 Sun Dec 14, 2014 7:53 am

குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.

இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை  அறிந்து கொள்வோம்.

குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.

சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.

அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.

திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"

- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்"

இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.

குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன.இந்த 51 எழுத்துக்களில் இருந்தே நமது தமிழ் மொழியும் பிறந்தன.

வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.

அதேபோன்று சிவாயநம எனும் இந்த நாமத்தை நமது தமிழ் மொழியில் மட்டும்தான் 5 எழுத்தை கொண்டு கூற முடியும்.

பாருங்கள் தமிழர்களின் சிறப்பை.இனியாவது நம் தமிழை ,தமிழ் பண்பாட்டை இழக்காமல் இருப்போம் .

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 1185781_442509052530439_1779575121_n

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty Re: குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by indian Mon Dec 15, 2014 9:25 pm

இல்லாத ஒன்றை பற்றி ஏன் இந்த விரிவுரை ?
indian
indian

Posts : 3
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Location : அமெரிக்கா

Back to top Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty Re: குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by ram1994 Tue Dec 16, 2014 4:22 am

இல்லாத இந்த ஒன்றை இல்லை என்று காட்ட ஆதாரம் தர முடியுமா ?

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty Re: குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by indian Tue Dec 16, 2014 6:31 am

இருக்கும் சூரியனை ஆதாரம் காட்டலாம். இல்லாத கானல் நீரை ஆதாரம் காட்ட முடியாது தம்பி ?

யோசி ?
indian
indian

Posts : 3
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Location : அமெரிக்கா

Back to top Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty Re: குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by ram1994 Tue Dec 16, 2014 9:29 am

அதெப்படி இல்லாத கானல் நீர் என்றால் ,பின்பு கானல் நீர் எப்படி வந்தது,அண்ணா ?ஆதாரம் காட்ட முடியாது என்றில்லை ,நீங்கள் தேடவில்லை?இதை பற்றி தெரியவில்லை,ஆதாரம் இருக்கிறன்றது.
சரியாய் தேடுங்கள் ,கண்டுபிடித்து கூறுங்கள்.மிக ஆவலாக உள்ளேன் அண்ணா.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -4 Empty Re: குண்டலினியும் தமிழ் மொழியும் -4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum