Top posting users this month
No user |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி
Page 1 of 1

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் அநுராதபுர மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனர்நிர்மானம் செய்வதற்கு நிதி வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் 23ம் திகதி அநுராதபுரம்- ஜயந்தி மாவத்தையிலுள்ள சிறைச்சாலை திடலில் இடம்பெறவுள்ளது என மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2 ஆயிரத்து 890 வீடுகள் சேதமடைந்தன என அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகளில் 563 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 2 ஆயிரத்து 327 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இதன்படி பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளின் புனர்நிர்மானப்பணிகளுக்காக 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக தலா ஒரு வீட்டிற்கு 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum