Top posting users this month
No user |
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: திருமாவளவன்
Page 1 of 1

ஐநா மனித உரிமை கூட்டத்துக்கு முன்னர் தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்று பல வாரங்கள் கடந்த பின்னரும்கூட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் திரும்பப் பெறப்படவில்லை.
இராணுவத்தை உடனடியாக திரும்பப் பெறுவோம் என வாக்குறுதி அளித்துத்தான் தமிழர்களின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றார்.
ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இனப் படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
மார்ச் மாதம் 2ஆம் திகதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்குத் தள்ளிப்போட இலங்கை செய்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டது.
செப்டம்பர் கூட்டத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என ஐநா மனித உரிமை ஆணையர் கூறியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினையில் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளையைப் போல தற்போதிருக்கும் ஆணையர் செயல்படுவாரா என்ற நியாயமான சந்தேகம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அதிபர் மைத்திரிபாலவைத் தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதன்மூலம் இந்துமாக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுகின்றன.
எனவே பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரிபாலவின் தரப்பு வெற்றிபெற வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் தமிழ் மக்களின் நலனைப் புறக்கணித்து மைத்திரிபாலவை இந்தியா ஆதரிப்பது புதிராக இருக்கிறது. அப்படிச் செய்வது இந்துமாக்கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்கம் பெருகவே வழிவகுக்கும். அது 'வாணலிக்குப் பயந்து அடுப்புக்குள் குதித்த’ கதையாகவே இருக்கும்.
ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் திரும்பப்பெறப்பட வேண்டும்,
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் உடனடியாக தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என இலங்கையை இந்தியா வலியுறுத் தவேண்டும்.
மைத்திரிபாலவுடன் போடப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தக்களுக்காக தமிழர் உரிமைகளைப் பலியிட்டுவிடக்கூடாது என இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum