Top posting users this month
No user |
வைத்தியசாலையில் நிலவும் வைத்திய பற்றாக்குறை: சிரமத்தில் பொதுமக்கள்
Page 1 of 1

நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் தொடர்ச்சியாக வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களால் நோயாளர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் கடந்த ஆறு மாத காலங்களாக வைத்தியர்கள் இல்லாமல் சிகிச்சைகாக சென்ற பொதுமக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இவ்வைத்தியசாலையில் 3 வைத்தியர்கள் கடமையாற்றி வந்த போதிலும் இரண்டு வைத்தியர்கள் சுகயீனம் காரணமாக விடுமுறை எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வந்துள்ளார்.
அதனால் இவ் வைத்தியர் 24 மணி நேரமும் சேவை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரும் சில நாட்கள் சுகயீனம் காரணமாக விடுமுறை எடுத்த போது வைத்தியசாலை நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை எடுக்கும் போது மாற்று வைத்தியர்கள் நியமிக்குமாறு கோரி நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்த போதிலும் அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கவில்லையென தெரியவந்துள்ளது.
எனவே இவ்வைத்தியசாலையில் நிலவும் வைத்திய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சரும், மலையக அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum