Top posting users this month
No user |
முகாம்களில் நிவாரணங்களற்று தவிக்கும் டொரிங்டன் தோட்ட மக்கள்- பனிப்பொழிவு: மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
Page 1 of 1

அக்கரப்பத்தனை பகுதியில் கடந்த வாரம் பெய்த கடும் மழையின் காரணமாக டொரிங்டன் தோட்டத்தில் இரண்டாம் இலக்கம் கொண்ட குடியிருப்பு பகுதியில் உள்ள 23 வீடுகளில் வாழ்ந்த 98 பேர் அப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக தோட்ட பிரசவவிடுதியிலும், தகவல் நிலையத்திலும் தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகமும் மற்றும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான திரு. பரமசிவம், திரு நல்லமுத்து ஆகியோரால் வழங்கப்பட்டன. எனினும் இங்கு தங்கி இருப்பவர்களுக்கு போதிய அளவு நிவாரண உதவிகள் கிடைப்பதில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இங்கு பாடசாலை மாணவர்களும் குழந்தைகளும் தங்கியிருப்பதால் பால்மா மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. அத்தோடு சில அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் வந்து நிவாரண பொருட்கள் தருவதாக பெயர் விபரங்கள் வாங்கிச் சென்ற போதிலும் அவர்கள் எங்களை ஏமாற்றியதாகவும் சம்பந்தப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு 23 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் உறவினர்களின் வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. தற்போது பல வீடுகள் வெடிப்புற்றும் ஒரு சில வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடதக்கது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பி. இராஐதுரை ஆகியோர் இதுவரை பாதிக்கப்பட்ட எங்களை வந்து பார்க்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பாதிக்கப்பட்ட எங்களுக்கு புதிய வீடுகளை அமைக்க மலையக அரசியல் வாதிகள் முன்வரவேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நுவரெலியாவில் பனிப்பொழிவு: மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது கடும் குளிரான கால நிலை நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா, இராகலை, உடப்புஸ்ஸலாவ, புஸ்ஸலாவ, லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, பூண்டுலோயா, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ,பத்தனை, அக்கரப்பத்தனை மற்றும் மலையகத்தில் பல பாகங்களிலும் இரவு நேரத்திலும் அதிகாலையிலும் கடும் குளிர் காணப்படுவதோடு பனியும்பெய்து வருகின்றது.
இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட தோட்ட தொழிலாளர்களும் வெளி பிரதேசங்களுக்கு செல்பவர்களும் பலவேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர் நோக்கிவருகின்றனர். அத்தோடு கடும் வெயில் காரணமாக குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
இதனால் மக்கள் குடி நீரை சிக்கனமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது. அத்தோடு மலையகத்தில் சில பகுதிகளில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படுகின்றது. அதிகாலை வேளையில் டயகம நகரத்திலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் அல்பியன் தோட்ட பகுதியில் அதிகூடிய பனி படலம் காணப்படுவதால் அப்பகுதியில் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum