Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியின் இந்திய விஜயம் மோடிக்கு வெற்றி ; ஈழத்தமிழருக்கு...
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு விஜயம் செய்த மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது பேசப்பட்ட விடயம், சந்திப்பின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் என்பன ஒரு புறம் இருக்க,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த சர்வதேச இராஜதந்திர வெற்றி என்று கூறலாம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனவுடன் உறவை ஏற்படுத்தி இந்தியாவை அகற்ற முற்பட்டார்.
மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த போது மகிந்த ராஜபக்ச இலங்கையில் நடத்திய நாடகங்கள் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போதிலும் அதுபற்றி எதுவும் கதைக்க முடியாத அளவிலேயே காங்கிரஸ் அரசின் நிலைமை இருந்தது.
மகிந்த ராஜபக்ச முன்னெடுத்த வன்னி யுத்தத்தில் இந்திய அரசு வழங்கிய உதவிகள் வெளிப்பட்டால் இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் இந்திய மத்திய அரசு மீதும் நகரும் என்பதன் காரணமாக மகிந்த எது செய்தாலும் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மெளனம் காத்தனர்.
ஆனால், கடவுள் செயலாக இந்தியாவில் மோடி ஆட்சியமைக்க எல்லாமுமே திசை திரும்பலாயிற்று. மோடி பிரதமரான போது இலங்கையில் மகிந்த ராஜபக்ச சீனாவுடன் கைகோர்த்து நின்றார். மோடி எதுவும் பேசவில்லை.
ஆனால் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இலங்கை - சீன உறவை முடிவுறுத்த முடியும் என்பது மோடியின் உறுதியான நம்பிக்கை. மோடியின் நம்பிக்கையை அமெரிக்காவும் அங்கீகரித்திருக்கும்.
காலப்பிழையும் சேர்ந்துவர, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச விடுத்தார். முடிவு மைத்திரி ஜனாதிபதி என்றாயிற்று. அவ்வளவுதான் இப்போது சீனாவை இலங்கை தூக்கி எறிந்து விட்டது. இந்தியாவின் நெருக்கமான உறவை ஏற்படுத்த மைத்திரி தயாராக இருக்கின்றார்.
அதன் ஓர் அங்கமாகவே அவரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது. இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுவார்.
ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம் மோடியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார். இவை நடந்து கொண்டிருக்கும் போது மெதுவாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை திரும்பிப் பாருங்கள். வதனம் பல மடங்கு வீக்கம் எடுத்திருப்பதை அவதானிக்க முடியும்.
ஆக, இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயமும் பிரதமர் மோடிக்கு கிடைத்த சர்வதேச இராஜதந்திர வெற்றி என்று கூறுவதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை.
மைத்திரியின் இந்திய விஜயம் மோடிக்கு வெற்றியாயினும் ஈழத்தமிழருக்கு அது வெற்றியை தருமா என்பதுதான் இங்கு எழுந்து நிற்கும் முக்கிய கேள்வி?
இலங்கையிலிருந்து சீனாவின் தொடர்பை அறுத்தெடுத்த பிரதமர் மோடி, ஈழத்தமிழர்களின் பிரச்சினையையும் அறுத்து விடுவாரா? அல்லது தனது நாட்டுப் பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று நினைப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் யாழ்.விஜயம் மகிந்தவுக்கு வீழ்ந்த உச்சி அடி
» பிரதமர் ரணிலின் இந்திய விஜயம்: விடுதலை செய்யப்பட்ட 16 மீனவர்கள் இந்தியா சென்றடைந்தனர்
» பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறும்! மைத்திரியின் இரகசிய கருத்துக்கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum