Top posting users this month
No user |
நல்ல நேரம் மைத்திரி வென்றார்: முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன
Page 1 of 1

யார் என்ன கூறினாலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த அணி தோல்வியடைந்து விட்டது எனவும் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்து வேறு ஒருவர் வெற்றி பெற்றிருந்தால், ஒன்றுகூடி பேசக் கூட முடியாமல் போயிருக்கும் என முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலரிடம் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால கட்சியின் செயலாளராக இருந்த நிலையில், கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் ஏன் கட்சியில் இருந்து சென்றார்?. ஏதோ தவறு இருக்கின்றது. கட்சியில் இருந்து நாங்களும் வெளியேற போகிறோம் என வதந்திகளை பரப்பினர்.
இதுதான் நமது நாட்டின் கீழ்த்தரமான அரசியல், மைத்திரிபால சிறிசேன கட்சியில் இருந்து வெளியேறி சுமார் ஆறு வாரங்களே வெளியில் இருந்தார்.
அவர் கட்சியில் இருந்து ஏன் சென்றார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். எனக்கு தெரியும். அதே பிரச்சினைகள் எமக்கும் இருந்தன. எனினும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருந்தோம்.
இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் மைத்திரிபால சிறிசேன வெளியேறியிருக்கலாம். கட்சியின் ஐக்கியத்தை காப்பதற்காக நாங்கள் வெளியேறவில்லை. மைத்திரிபால வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பது வேறு ஒருவர் வெற்றி பெறுவதை விட சிறந்தது என்பதையும் நாம் கூறவேண்டும்.
மைத்திரி தோற்று வேறு ஒருவர் வென்றிருந்தால், நாம் இணைவதைக் கூட எண்ணிப்பார்க்க முடியாது. சில நேரம் நாங்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் இருக்க நேர்ந்திருக்கும். நமது அதிஷ்டம் அப்படி நடக்கவில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
நாம் தோற்போம் என்று எவரும் எண்ணவில்லை. எம்மில் சிலர் தேர்தலுக்கு முன்னரே வெற்றி பெற்றிருந்தனர். தேர்தல் நடத்தும் போது குறைப்பாடுகள் இருக்கும். ஆனால் தற்போது செய்வதற்கு எதுமில்லை. இதுதான் எதார்த்தம். இதனை நாம் எதிர்கொண்டுள்ளோம் எனவும் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum