Top posting users this month
No user |
Similar topics
ஜப்பான் நாட்டு இளைஞர், யுவதிகள் வாகரைக்கு விஜயம்
Page 1 of 1

ஜப்பான் நாட்டின் சார்பில் வருகை தந்த இளைஞர், யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு வாகரை மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
உலகளாவிய இளைஞர் தலைமைத்துவ வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைய புரிந்துணர்வு மற்றும் மனிதநேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் “நிப்பொண்மாரு நல்லெண்ண உலக சுற்றுலா” என்பதற்கு ஏற்ப இவர்கள் விஜயம் செய்துள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜாவின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலுடன், மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும், வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இந்த வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வின் போது முதலாவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உருவாக்கத்தில் “லலிதா கலா” நாட்டியக் குழுவினரின் நடனம் உட்பட கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் பின் மனிதநேயம் பேணும் சிரமதானம் வாகரை மாவட்ட வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டு இளைஞர் குழுவினர் தமது வருகைக்கான நினைவாக வர்ணம் பூசப்பட்ட சுவரில் தமது நாட்டின் தேசியக் கொடியுடன் கூடிய கப்பலை வரைந்து தமது பெயர்களையும் குறித்துக் கொண்டனர். அத்துடன் வாகரை பிரதேச சம்மேளத்துக்கும், வைத்தியசாலைக்கும் நினைவுச் சின்னமும் வழங்கினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பேரேரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.எம்.நைறூஸ், வாகரை பிரதேச சபையின் செயலாளர் சி.இந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊடக அமைச்சர் ஜப்பான் விஜயம்
» ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்
» ஜப்பான் முன்னேறியது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum