Top posting users this month
No user |
பசில் ராஜபக்சவுக்கு மூன்று மாத கால விடுமுறை!
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாராளுமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான அனுமதி கேட்டுள்ளார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை குறித்து அறிவிக்கும் அறிவித்தலை விடுத்ததன் பின்னர் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மூலம் பசில் ராஜபக்சவின் விடுமுறை அனுமதி பத்திரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பசிலின் விடுமுறை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
பசில் ராஜபக்ச தனிப்பட்ட காரியங்களுக்காகவா அல்லது சுகவீனம் காரணமாகவா விடுமுறை அறிவித்துள்ளார் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச ஒருவர் விடுமுறை எடுப்பதற்கு முன்னர் இவ்வாறு அறிவித்தல் ஒன்று விடுப்பது சிறப்பான விடயம் என தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு திடீரென அமெரிக்கா சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவுக்கு மூன்று மாதகால விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட விடுமுறை கோரிக்கைக்கு அமையவே சபை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum