Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார் மைத்திரி! - திறக்காத ஏழுமலையான் மூலவர் அறை

Go down

திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார் மைத்திரி! - திறக்காத ஏழுமலையான் மூலவர் அறை Empty திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார் மைத்திரி! - திறக்காத ஏழுமலையான் மூலவர் அறை

Post by oviya Wed Feb 18, 2015 1:29 pm

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
நேற்றிரவு டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி தனது மனைவி ஜெயந்தியுடன் இன்று அதிகாலை திருப்பதி சென்றார்.

கோயில் நிர்வாகம் சார்பில் இலங்கை ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

சிறிசேன வருகை! திறக்காத ஏழுமலையான் மூலவர் அறை! பூட்டு உடைக்கப்பட்டது!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வருகையின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல் போனதால் உடைக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும்.

இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர்.

ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது. அதன் பிறகு பாலசிறிசேனவும் சாமி தரிசனம் செய்தார்.

மூலவர் அறையின் தங்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பூட்டு உடைக்கப்பட்டதால் சாமிதரிசன சேவையில் பாதிப்பு இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum