Top posting users this month
No user |
ஜனாதிபதி நாடு திரும்பியதும் கிழக்கு மாகாண அமைச்சரவை நியமனம்
Page 1 of 1

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் கிழக்கு மாகாண அமைச்சரவை நியமிக்கப்படும் என முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தான் முதலமைச்சராக பதவியேற்ற மறுகணமே ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியாக வருடாந்தம் 40 இலட்சம் ரூபாவை அதிகரித்துள்ளதாகவும், கடந்த வருடம் 30 இலட்சம் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை ஆட்சியில் 4 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 37 மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், தற்போது ஏழு உயர் பதவிகள் மிகுதியாக உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி இப்பதவிகள் வழங்கப்படும்.
அம்பாறை மாவட்டத்திற்கும் ஒர் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum