Top posting users this month
No user |
Similar topics
கழிவகற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்: யாழ்.மாநகர சபை முடிவு
Page 1 of 1

கழிவகற்றும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.
யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகரசபையினால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள் இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே மாநகர சபை கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
இந்த கழிவகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர் அனைவரும் ஏனைய குடியிருப்பாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகாத வகையிலும் வீதிகளை அசுத்தப்படுத்தாது சுகாதாரமான சூழலை பேண ஒத்துழைக்குமாறும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , கடந்த பல ஆண்டுகளாக கல்லுண்டாய் வெளியில் யாழ். மாநகர சபை கழிவுப் பொருட்களைக் கொட்டி வந்ததினால் அப்பிரதேசத்தின் குடியிருப்பாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன் பல்வேறு நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகினர்.
இதனால் பல தடவைகள் குறித்த பகுதியில் கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையினர் யாழ். மாநகர சபைக்கு கடிதங்களை அனுப்பிவைத்த போதிலும் இச்செயற்பாட்டில் மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் பொதுமக்கள் இணைந்து அண்மையில் குறித்த இடத்தில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் குப்பைகளை ஏற்றி வந்த டிரக்டர்களையும் திருப்பி அனுப்பினர்.
அத்துடன் ஆணையாளருடனும் நியாயம் கேட்டு போராடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆணையாளர் . யாழ். மாநகர சபைக்கு குறித்த இடத்தில் குப்பைகளைப் கொட்டுவதற்கு அனுமதி உள்ளதாகவும், பொதுமக்கள் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றத்தை நாடுமாறும் பொதுமக்களுக்கு ஆணையாளர் தெரிவித்ததுடன் தொடர்ந்தும் குறித்த பகுதியில் மக்கள் கூடி போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் கழிவுகளைக் கொட்ட முடியாத நிலைக்கு மாநகர சபை தள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்தே தீர்வொன்றினைப் பெறும் வரை கழிவுகளைக் எடுக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்துவதாக ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 28 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு
» தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!
» கண்டி மாநகர புதிய மேயர் பதவிப்பிரமாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum