Top posting users this month
No user |
முன்னாள் அமைச்சா் தொண்டமானுக்கு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்காக பகிர்ந்தளிக்கும்படி வழங்கப்பட்ட பொருட்களை பொதுமக்களிடம் விநியோகிக்க வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு அறிக்கையின் பிரதி ஒன்று நோர்வூட் பொலிஸார் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் கையளித்தனர்.
கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்காக பகிர்ந்தளிக்கும்படி வழங்கப்பட்ட பொருட்களை 17.02.2015 அன்று சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் ஆகியோர் மேற்படி பொருட்களை நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து மக்களுக்கு பகிர்ந்தளித்த பின் ஹற்றன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோவினால் குறித்த பொருட்களை பொது மக்களிடம் விநியோகிக்க வேண்டாம் என உத்தரவு அறிக்கையின் பிரதி ஒன்று நோர்வூட் பொலிஸார் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் கையளித்தனர்.
அதேபோல் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்ற அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் நோர்வூட் பொலிஸார் இந்த உத்தரவு அறிக்கையின் பிரதியை கையளித்துள்ளனர்.
பகிர்ந்தளிக்கப்பட்ட பொருட்களை பொது மக்கள் மைதானத்திலிருந்து கொண்டு செல்லும் வேளையில் மைதானத்தின் நுழைவாயிலை மூடி வழிமறைத்து நோர்வூட் பொலிஸ் உட்பட ஏனைய பொலிஸாரும் மக்களிடமிருந்து பொருட்களை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பொருட்களாவன சீமெந்து இயந்திரம், தகரம், கூடாரங்கள், கதிரைகள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த பொருட்களை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் பகிர்ந்தளிக்கும் போது தற்போது பகிர்ந்தளிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளரினால் வழங்கிய உத்தரவினால் மேற்படி பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்காமல் வைத்திருக்கும் போது பதுக்கி வைத்திருப்பதாக சிலர் பொலிஸாருக்கு தெரிவித்த தகவலையடுத்து பொருட்களை பொலிஸார் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஹற்றன் நீதவான் முன்னிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த ஹற்றன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே விசாரணைகளை நடத்திய பின் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு கடந்த அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு இந்த பொருட்களை பகிர்ந்தளிக்கலாம் என பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இந்த பொருட்கள் பற்றிய விசாரணை மீண்டும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் குழு ஒன்று இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதனால் பகிர்ந்தளிப்பதை நிறுத்தம்படியும் இவ்வாறு பொருட்களை பகிர்ந்தளித்தால் சமாதான சீர்கேடு ஏற்படலாம் என ஹற்றன் பொலிஸார் ஹற்றன் பதில் நீதவான் முன்னிலையில் கருத்தை முன்வைத்துள்ளனர்.
அதன்பின் பொலிஸாரின் கருத்தை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் உடனடியாக பொருட்கள் வழங்குவதை நிறுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum