Top posting users this month
No user |
சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும்: வடமாகாண ஆளுனர்
Page 1 of 1

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன என வட மாகாண ஆளுனர் பளிகக்கார தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவிடயங்களையும் கலந்துரையாடல் மூலமே பேசித் தீர்க்க முடியும். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளன. எனினும் இடம்பெற்ற அபிவிருத்திகளை குறைவாகவோ அல்லது நிறைவாகவோ எண்ணக்கூடாது. எமக்கு இருக்கின்ற பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக பேசுவதனூடாக வெற்றிபெற முடியும்.
அரசு எண்ணுவது போலவே சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும் என்றே நானும் நம்புகின்றேன். கலந்துரையாடல்கள் இன்றி பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.
அத்துடன் நானும் ஒரு அரச ஊழியன் தான். மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெற்று வருகின்றோம். எனவே அந்த மக்களுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் வடக்கு முதலமைச்சர் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அவற்றைச் செய்வதற்கு நானும் ஒத்துழைப்பு வழங்குகின்றேன் என அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum