Top posting users this month
No user |
Similar topics
தண்டனைகள் தாமதமானால் குற்றவாளிகள் வலுவடைவர்
Page 1 of 1

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி அடைந்ததை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் அவரது சகோதரர்களும் ஆட்சியில் இருந்தபோது செய்த பாதகங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.
அதில் மிகவும் முக்கியமானது ஜனாதிபதித் தேர்தலில் தனக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மகிந்த ராஜபக்ச நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்ற செய்தியாகும்.
இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டிருந்தால்; மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க உட்படப் பல அரசியல் தலைவர்கள் சிறை சென்றிருப்பர். இன்னும் சிலர் காணாமல் போயிருப்பர். நல்ல காலம் இராணுவ ஆட்சிக்கு படைத்தரப்பு சம்மதிக்கவில்லை என்று கேள்வி. எதுவாயினும் நாட்டில் இராணுவ ஆட்சியைக் கொண்டு வர முயற்சி செய்வதென்பது பாரதூரமான குற்றமாகும்.
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுதல் என்ற பேரில் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். புதிய புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பிரிவினைவாதத்திற்கு துணைபோக மாட்டோம் என்று சத்தியம் செய்கின்ற நடைமுறை கூட அரசியல் அமைப்பில் புகுத்தப்பட்டது.
நிலைமை இதுவாக இருக்க, நாட்டில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகள் குறித்தும் இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக் கப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில், மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பொதுவில் குற்றவாளிக்கு உரிய தண்டனை என்பது உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இல்லையேல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அரசியல் புலத்தின் களநிலைமையை தமக்குச் சாதகமாக்கி விடுவர். அத்தகையதொரு நிலைமை நடக்குமாக இருந்தால் குற்றவாளிகள் பொய்ப்பிரசாரம் செய்து நியாயமான ஆட்சியை முறியடிக்கவும் செய்வர். அதற்கான சந்தர்ப்பமும் சாத்தியமும் இலங்கையில் தெரிகிறது.
குறிப்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட்டு பிரதமர் பதவியை பெறுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த முயற்சி வெற்றி தருமாக இருந்தால், இராணுவப் புரட்சியை ஏற்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டு புஷ்வாணமாகி விடும்.
ஆகையால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் மீது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பில், போர்க்களத்தில் உயிர்நீத்த தன் உடன்பிறப்பை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றினால் அது குற்றம். மாவீரர் தினத்தில் நடுகல்லுக்கு மாலை அணிவித்தால் அது மகாகுற்றம். மாவீரர் நாளில் கோயில் மணி அடித்தால் அது தெய்வகுற்றம் என்று தமிழர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் படைத்தரப்பினர், இராணுவப் புரட்சி செய்ய முயன்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீது சட்ட நடவடிக்கை எடுக்க, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்?
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆட்சித் தலைவர் எது செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கொள்கையிலா மகிந்த மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழுவதில் மிகுந்த நியாயம் உள்ளது.
ஆகையால் குற்றவாளி தமிழரா? சிங்களவரா? என்று நோக்காமல் இழைக்கப்பட்ட குற்றம் யாது என்று அறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதே நாட்டில் ஜனநாயகம் உயிர் வாழ்வதற்கு உதவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விசாரணை அறிக்கை தாமதமானால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப இடமளிக்கும்: மன்னிப்புச் சபை
» அரசாங்கத்துக்குள் குற்றவாளிகள்!- தேசிய சுதந்திர முன்னணி!
» பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum