Top posting users this month
No user |
Similar topics
ஓட்டமாவடியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு! 34 பேர் பாதிப்பு
Page 1 of 1

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரை 34 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட இறுதியின் பெய்த அடை மழையைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழை காரணமாகவும், டெங்கு நுளம்பின் தாக்கம் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஓட்டமாவடி 01 கிராம சேவகர் பிரிவிலேயே 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரை இருபது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களை தொடர்ந்து விழிப்பூட்டும் வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் வீடு வீடாக சென்று வீடுகளையும், வீட்டுச் சூழலையும் பார்வையிடுவதுடன், பொது மக்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரை எமது பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்த குற்றத்தில் பத்து பேருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பிரதேசத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அடங்களாக குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்குழு பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை குறைக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்யவுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum