Top posting users this month
No user |
யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்
Page 1 of 1

யாழ்.கல்லுண்டாய் வெளிபகுதியில் யாழ்.மாநகரசபை மற்றும் பல உள்ளூராட்சி சபைகளினால் கண்மூடித்தனமாக கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்து நவாலி, அரசடி மற்றும் ஆணைக்கோட்டை பகுதி மக்கள் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
மேற்படி பகுதியில் கண்மூடித்தனமாக கழிவுகள் மற்றும் மனிதன், விலங்குகளின் உடல் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கல்லுண்டாய் பகுதியை அண்மித்திருக்கும் ஆணைக்கோட்டை, நவாலி மற்றும் அரசடி பகுதி மக்கள் துர்நாற்றம், நுளம்பு, இலையான் போன்ற பல பிரச்சினைகளுக்கும், தோல்வியாதிகள், வயிற்றோட்டம் போன்ற பல நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விடயம் குறித்து பல தரப்பினரிடமும் முறைப்பாடு கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையினை கண்டித்தே மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை வீதியில் ஆணைக்கோட்டை பகுதியிலிருந்து பாதிக்கப்பட்ட மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலை 9மணிக்கு ஊர்வலமாக நடந்து சென்று கல்லுண்டாய் வெளிகுப்பை கொட்டப்படும் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது அந்தப் பகுதிக்கு யாழ்.மாநகரசபை ஆணையாளர். எஸ்.பிரணவநாதன் வருகை தந்திருந்தார்.
எனினும் வாகனத்தில் இருந்து இறக்காமல் இருந்த அவரை கீழே இறங்குமாறு மக்கள் கேட்டபோதும் அவர் இறங்கவில்லை.
பின்னர் மக்களுடைய இந்த கடுமையாக கோரிக்கைக்கு மத்தியில் கீழே இறங்கிய அவர் மக்களுடன் பேசினார். இதன் போது குறித்த பகுதியில், கழிவுகளை கொட்டவேண்டாம் என கூறுவதற்கு முதலமைச்சருக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வதென்றால் செல்லுங்கள் என கூறினார்.
மேலும் கண்மூடித்தனமாக மலக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் முன்வைத்த, குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார். ஆனால் மக்கள் உன்மையில் கொட்டப்படுவதில்லை என்றால் நேரில் சென்று பார்வையிடுமாறும், தங்களுடைய கிராமங்களுக்கு வந்து நிலைமையினைப் பார்வையிடுமாறும் மக்கள் கோரினர்.
பின்னர் கல்லுண்டாய் வெளியில் குப்பை கொட்டுவதற்கு தமக்கு உரித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் அவ்வாறு உரித்து உண்டானால் அதனை ஒரு வாரத்திற்குள் காண்பிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு ஒத்துக் கொண்ட ஆணையாளர் அதனை நிரூபிப்பதாக கூறிச் சென்றதனையடுத்து குறித்த குப்பை கொட்டும் பகுதியை கொங்கிறீட் தூண்களைக் கொண்டு மறைத்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum