Top posting users this month
No user |
Similar topics
தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரும் அரசியல்வாதிகள்
Page 1 of 1

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும் வரை நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளார்.
சுமதிபாலவின் யோசனைக்கு பதிலளித்துள்ள உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க, தேர்தலை ஒத்திவைக்க இது சிறந்த நகர்வாக இருக்கும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினால் அனைவரும் தேர்தலுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றிவார்கள் எனவும் மறுசீரமைப்பு ஏற்படும் எனவும் விஜேசிங்க கூறியுள்ளார்.
தொகுதிவாரியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை இரு தரப்பிலும் வலுத்துள்ளதுடன் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்ற உடனடியாக கலைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த தேர்தல் முறையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
புதிய முறையில் தேர்தலை நடத்த காலஅவகாம் இல்லை என்பதால், பழைய முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது விகிதாசார தேர்தல் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அதில் ஒரு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெரும் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த கட்சிகளுக்கான ஆசனங்கள் தீர்மானிக்கப்படுவதுடன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலை நடத்த கால அவகாசம் கோரும் மகிந்த தேசப்பிரிய
» மலையகத்தில் மலையக அரசியல்வாதிகள் கொண்டாட்டம்
» குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா? துமிந்த கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum