Top posting users this month
No user |
மைத்திரிபால சிறிசேனவின் தெரிவு சட்ட விரோதமானது: பேராசிரியர் நளின் டி சில்வா
Page 1 of 1

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் சம்பந்தமாக அரசாங்கம் முன்வைத்த வாதங்கள் செல்லுப்படியாகும் என்றால், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதும் சட்டவிரோதமானது என பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“ஜாதிக பலய” அமைப்பினால், நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த இல்லாத நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய தவறாக நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் தவறானது என கருத முடியும் என்றால், அவரது நியமனம் தவறு என்றாலும் அது சம்பந்தமாக செயற்படக் கூடிய எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமாயின், அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்பும் செல்லுப்படியற்றதாகி விடும் என்பதால், நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலும், மைத்தி்ரிபால சிறிசேனவின் நியமனம் செல்லுப்படியற்றதாகி விடும் எனவும் நளின் டி சில்வா வாததத்தை முன்வைத்தார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததும் சட்டவிரோதமானதும் செல்லுப்படியற்றதுமான நியமனங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட விதம் குறித்து நாடாளுமன்றத்திற்கே கேள்வி எழுப்ப முடியும், ஜனாதிபதியினால் கேள்வி எழுப்ப முடியாது. இதனடிப்படையில், மொஹான் பீரிஸூக்கே அந்த பதவி இன்னும் உரித்தானது.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் இல்லாத நிலையில், இலங்கை இரண்டாக பிளவுப்படுத்து சமஷ்டி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மக்கள் பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என்றும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum