Top posting users this month
No user |
பொன்சேகா தனித்துப் போட்டி- இராணுவத் தளபதியை பதவி நீக்கக் கோரிக்கை
Page 1 of 1

இராணுவத் தளபதியை பணி நீக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை பணி நீக்குமாறு சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். என்ன காரணத்திற்காக இவ்வாறு பணி நீக்க வேண்டுமென அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த அரசாங்க காலத்தில் சரத் பொன்சேகா கடுமையாக அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக கட்சி தனியாக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி தலைமையகத்தில் இன்று பகல் இடம் பெற்ற செய்தியாளர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
தன் கட்சி நாடு பூராகவும் பலம் வாய்ந்த வாக்கு அடிப்படையை கொண்டதனால் தான் தனியாக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தொகுதிகளுக்கும் தொகுதி அமைப்பாளர்கள் இருப்பதனால் அவர்கள் அனைவரும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum