Top posting users this month
No user |
Similar topics
மின்னல் தாக்கத்தில் இளைஞர் பலி: சீமெந்து தொழிற்சாலைக்கு இனம்தெரியாதோரால் தீ வைப்பு
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிக் கிராமத்தில் மின்னல் தாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் சின்னத்தம்பி தெய்வேந்திரன் (வயது 34) என்பவர் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் உறக்கத்தில் இருந்தவேளையிலேயே மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மட்டக்களப்பின் சில பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடி, மின்னலுடன் மழை பெய்துவருகின்றது.
சீமெந்து தொழி்ற்சாலைக்கு இனம்தெரியாதோரால் தீ வைப்பு!
மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள சீமெந்து கல் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு திங்கட்கிழமை தீ வைக்கப்பட்டதுடன், தொழிற்சாலையில் கடமையில் இருந்த காவலாளி மற்றும் உத்தியோகத்தர்கள் இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பெற்றோல் குண்டு, கல் மற்றும் மிளகாய்த் தூள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கணனி அலுவலகத்திலுள்ள கணனி மற்றும் ஆவணங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு
» கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- மின்னல் தாக்கி இளைஞன் பலி
» மின்னல் தாக்கத்தினால் மூவர் வைத்தியசாலையில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum