Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது!

Go down

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது! Empty ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது!

Post by oviya Sun Feb 08, 2015 11:19 am

புதிய ஆட்சி, மக்கள் மத்­தியில் பலத்த எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த வகையில் மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற வேண்­டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்­சி­யா­ளர்­களை சார்ந்­த­தாகும்.
மாறாக, ஏமாற்­றங்கள் ஏற்­படும் பட்­சத்தில் அது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்த செய்­வ­துடன் மக்கள் மனதில் மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்த வழி­வ­குப்­ப­தா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

குறிப்­பாக, தமிழ் பேசும் மக்கள் புதிய அரசின் மீது அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள் மற்றும் அநா­வ­சிய நெருக்­க­டிகள் நீங்கி நல்­லாட்சி பிறக்கும் என்ற ஒரே எதிர்ப்­பார்ப்பே இதற்­கான அடிப்­படைக் கார­ண­மாகும்.

வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் எத­னையும் விசே­ட­மாக எதிர்­பார்க்­க­வில்லை. மறுக்­கப்­பட்ட தமிழர் உரி­மைகள், அப­க­ரிக்­கப்­பட்ட தமது காணிகள், கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட தமது சொத்­துக்கள் என்­பவை மீளக்­கி­டைத்தால் போதும் என்ற ஒரே எதிர்­பார்ப்­பி­லேயே அவர்கள் காணப்­ப­டு­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மன்றி, காலா­கா­ல­மாக எது­வித விசா­ர­ணை­யு­மின்றித் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமது உற­வுகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். மற்றும் காணாமல் போன தங்கள் உற­வி­னர்­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்ற உண்மை வெளிச்­சத்­துக்கு வர­வேண்டும் என்ற ஒரே ஏக்­கமே அவர்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளது.

புதிய அரசு தமது 100 நாள் வேலைத்­திட்­டத்தில் பல்­வேறு திட்­டங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய நிலையில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த எதிர்­பார்ப்­புடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் தன்­னா­லான நல்­லெண்ண சமிக்­ஞை­களை அவ்­வப்­போது காட்டி வரு­வ­துடன், அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எந்­த­வி­த­மான குந்­த­கத்­தையும் ஏற்­ப­டுத்­தாத வகையில் செயற்­பட்டும் வரு­கின்­றது.

குறிப்­பாக, கடந்த மூன்று தசாப்த காலத்­துக்கு மேலாக இலங்­கையில் சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­களில் தமி­ழ­ரசுக் கட்சி பங்­கேற்­கா­தி­ருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி நடை­பெற்ற இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இது கட்­சிக்­குள்ளும் வெளி­யிலும் சில விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்த போதிலும், காலத்­துக்­கு­கந்த செயற்­பாடு என கூறவும் தவ­ற­வில்லை. தொடர்ந்து எதிர்ப்பு அர­சி­யலை மேற்­கொண்டு எந்தப் பய­னையும் காண­மு­டி­யாத நிலையில் இணக்க அர­சி­யலை மேற்­கொண்­டேனும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்டும் என்ற கருத்து மேலோங்­கி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இத­னி­டையே, புதிய அரசு தனது நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் வகையில் வட மாகாண சபைக்கு சிவில் அதி­காரி ஒரு­வரை ஆளு­ந­ராக நிய­மித்­தி­ருந்­த­துடன், சர்ச்­சைக்­கு­ரிய பிர­தம செய­லா­ள­ரையும் இடம் மாற்­றி­யி­ருந்­தது.

இதனை வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் வர­வேற்­றி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்தப் பின்­ன­ணியில் வட­மா­காண சபை எதிர்­வரும் காலத்தில் நெருக்­க­டிகள் அற்ற வகையில் தனது செயற்­பாட்டை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை உரு­வா­கி­யுள்­ளது.

இதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த நான்காம் திகதி ஆற்­றிய சுதந்­தி­ர­தின உரையும் பல­ராலும் பாராட்­டப்­பட்­ட­தாகும். அவர் தனது ஆழ் மன­தி­லி­ருந்து கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் எனப் பர­வ­லாக விமர்­சிக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி தன­து­ரையில் 30 வருட கால யுத்தம் நிறை­விற்கு கொண்­டு­வ­ரப்­பட்டு சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு விட்­ட­தாகக் கூறப்­படும் போதிலும் வடக்கு, தெற்கு மக்­களின் இத­யங்­களை இணைப்­ப­தற்­கான இய­லுமை இல்­லாமல் போய்­விட்­டது.

எனவே, வடக்கு மக்­க­ளையும் தெற்கு மக்­க­ளையும் இணைத்து தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி மனி­தா­பி­மா­ன­மிக்­க­வர்­களின் தேச­மாக இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்பி முன்­னோக்கி பய­ணிக்க வேண்­டிய தருணம் இது­வென அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

வழ­மைக்கு மாறாக பாரிய இரா­ணுவ தள­பா­டங்கள், போர்­மு­ரசு கொட்டும் ஆல­வட்­டங்கள், பாரிய படை பட்­டா­ளங்கள் இன்றி எளி­மை­யான முறையில் கடந்த சுதந்­திர தின விழா அமைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதனை பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுடன் சேர்ந்து தமிழ்ப் பேசும் மக்­களும் கொண்­டா­டி­னார்கள் என்ற உண்­மையை மறுப்­ப­தற்­கில்லை.

உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அத்­தி­பா­ர­மாக இது அமைந்­தி­ருந்­தது எனக் கூறலாம். பெரும்­பான்மை கடும் போக்­கா­ளர்­க­ளுக்கும் அவர்கள் சார்ந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் இது கசப்­பான விட­ய­மாக இருந்த போதிலும், ஜன­நா­ய­கத்தை விரும்பும் பெரும்­பான்மை மக்கள் இதனை ஆத­ரிக்­கவே செய்­தனர்.

அந்த வகையில், எந்­த­வொரு விட­யமும் வெறு­மனே வார்த்­தை­க­ளோடு அடங்கி விடாமல் அதனை செயலில் மேற்­கொள்ள வேண்­டிய தார்­மீகப் பொறுப்பு அர­சாங்­கத்தைச் சார்ந்­த­தாகும். அதுவே நல்­லாட்­சிக்­கான உறு­தி­யான அத்­தி­பா­ர­மாக அமையும் என்றும் நம்­பலாம்.

இதே­வேளை, பல்­வேறு சமூ­கங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அவர்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து பரிந்­துரை செயற்­வ­தற்­கா­கவும் நல்­லி­ணக்­கத்­திற்­கான விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விசேட ஜனா­தி­பதி செய­லணி, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் தொடர்­பாக எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும், கடந்த காலத்தில் யுத்­தத்தால் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள், கஷ்­டங்கள் தொடர்­பிலும் பல்­வேறு பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மெனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றெ­னினும், இவை கால­தா­ம­த­மா­னாலோ அன்றேல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­மா­னாலோ மக்­களின் நம்­பிக்கை புஸ்­வா­ண­மா­கி­விடும் என்­பதே யதார்த்­த­மாகும். புதிய அரசின் ஒரு­சில நட­வ­டிக்­கைகள் மக்கள் மத்­தியில் ஒரு­வித கிலே­சத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

குறிப்­பாக ஓமந்தை சோதனைச் சாவ­டியில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் நிறுத்­தப்­பட்­டி­ருந்த சோதனை நட­வ­டிக்­கை­க­ளை­ய­டுத்து தமிழ் மக்கள் மத்­தியில் மிகுந்த பாராட்டு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், நிம்­மதிப் பெரு­மூச்சும் விட்­டனர். எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக கடந்த புதன்­கி­ழமை முதல் மீண்டும் சோதனை நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பாது­காப்பு அமைச்­சி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற திடீர் உத்­த­ரவே இதற்கு கார­ண­மெ­னவும் கூறப்­ப­டு­கின்­றது. இது தமிழ் மக்கள் மத்­தியில் ஒரு­வித அதி­ருப்­தியை தோற்­று­வித்­துள்­ள­துடன் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடுமோ என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தவிதமான போக்குகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வரும் நல்லெண்ணத்தை சிதறடித்துவிடும் ஒன்றாக மாறிவிடும் என்பதையும் ஆட்சியாளர்கள் மறந்துபோகக் கூடாது.

இதுவரை காலம் மாறி மாறிப் பதவிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களை ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலையில் நடத்தி வந்தன. அந்த நிலைமை இந்த ஆட்சியில் ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவாவது அவசியமாகும்.

அதற்கு அரசியலுக்கு அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வை முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்சியாளர்களைச் சார்ந்ததாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum