Top posting users this month
No user |
காத்தான்குடியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- டெங்குக் காய்ச்சலினால் இருவர் பலி
Page 1 of 1

ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று மதியம் காத்தான்குடி நகரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தினால் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் வாகனங்களுக்கும் சேதமும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய டிப்பர் வாகனங்கள், முச்சக்கரவண்டி, சிறிய கப் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்களானது.
இதனால் வாகனங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகின. விபத்து காரணமாக சில மணிநேரம் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதலில் சென்ற வாகனம் திடீரென பிறேக் போட்டமையால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் இருவர் பலி
டெங்கு காய்ச்சலினால் காத்தான்குடி நகர சபை பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி புதிய காத்தான்குடி கோழி வியாபாரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (26) எனும் இளைஞனே இதில் உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்தவருக்கு டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடி நகர சபை பிரிவில் நேற்று சிறுமியொருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum