Top posting users this month
No user |
மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை
Page 1 of 1

மட்டக்களப்பு ஏறாவூர்- செங்கலடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
குறித்த பிரதேசத்திற்குற்பட்ட ரயில் பாதையை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர்
நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்து 200 ரயில் பாதை கடவைகள் காணப்படுகின்றன எனவே அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் ரயிலினால் ஏற்படுகின்ற அனர்த்தங்களை தவிர்க்க எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே போக்குவரத்து அமைச்சர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum