Top posting users this month
No user |
பொத்துவில் கிராமங்களில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்
Page 1 of 1

பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள மீள்குடியேற்றப்படாத மக்களை நேற்று நேரடியாகச்சென்று அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாகவும், அவர்களது இன்றைய நிலைதொடர்பாகவும் கலந்துரையாடும் கூட்டம் ஒன்று பொத்துவில் குண்டு மடு பிரதேசத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தலமையில் நடைபெற்றது.
தமிழ் மக்களினது பூர்வீக நிலங்களில் மீண்டும் சென்று குடியேறி அங்கு தங்களது வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக தாங்கள் அந்த இடத்திற்கு போகவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசனிடம் வேண்டுகோளொன்றினை மக்கள் விடுத்தார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இந்த விடயம் தொடர்பாக உரியவர்களுடன் உரிய ஆதாரங்களை காண்பித்து எமது மக்களினுடைய பூர்வீக நிலங்களில் சென்று குடியேறி வாழ்வதற்கு ஏற்றாற்போல் உறுதிமொழிகளை பெற்று தற்போது நடைமுறையில் இருக்கும் வீட்டுத்திட்டத்தினையும் பெற்று எமது தமிழ் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்ககையில்,
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே, அவர்கள் அன்று இருந்து இன்று வரைக்கும் ஒரு நிரந்தரமான இடதில் வாழாது அங்குமிங்குமாக அலைந்து ஏதிலிகளாக வாழ்ந்த வரலாறே இன்றும் இருந்து கொண்டு இருக்கின்றது.
பரம்பரையாக வாழ்ந்து வந்த பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கொட்டுகல் கிராமத்தில் உள்ள மக்கள் இன்று அங்கிருந்து சுனாமிக்குப் பின்னர் வெளியேறியவர்கள் மீண்டும் தங்களது நிலத்தில் போய் குடியேற முற்பட்ட போது அந்தப்பிரதேசத்தில் இருக்கும் பார்த்தீபன் என்பவரால் விரட்டியடிக்கப்பட்டதன் காரணமாக அந்த மக்கள் மீண்டும் ஏதிலிகளாக ஆக்கப்பட்டு தங்களது நிலத்தினை இழந்து மாற்று இடத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டு வருகின்றார்கள்.
இவர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கொட்டுக்கல் எனும் கிராமத்தினை பார்வையிடச் சென்றபோது அப்பிரதேச மக்களும் அங்குபிரசன்னமாகியிருந்தார்கள் அப்போது அந்த மக்கள் தங்களது நிலங்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் காட்டி அதனை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த இடத்திற்கு வந்து தன்னை அந்த நிலத்திற்கு சொந்தமானவர் என்று அடையாளப்படுத்திய பார்த்தீபன் அங்கு இருந்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டிருந்தார்.
அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோதும் அங்கிருந்து எவரும் வெளியேறவில்லை, அங்குள்ள நிலமைகளை எடுத்துக்கூறிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தின் பின்சென்று அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வோம் எனவும் அவருக்கு விளக்கமளித்தார்.
கொட்டுக்கல் கிராமமானது 108 ஏக்கர் காணி நிலப்பரப்பினைக் கொண்டது அந்த ஏக்கரில் 20ஏக்கர் விவசாயம் செய்வதற்குரிய நிலப்பரப்பாகும் அந்த மக்களிடம் தாங்கள் அங்கு வாழ்ந்ததற்குரிய சகல ஆதாரங்களும் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இது தொடர்பாக உரியவர்களுடன் பேசி காணிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum