Top posting users this month
No user |
சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் பங்கேற்பு! விமர்சனம் வேண்டாம்: நடேசபிள்ளை கோரல்
Page 1 of 1

இலங்கையின் 67 வது சுதந்திர நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றமையை அர்த்தமற்ற முறையில் விமர்சிக்க வேண்டாம் என திருமலை மாவட்ட சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதூர் சிவில் அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கந்தைய்யா நடேசபிள்ளை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பா. உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கடந்த 4ம் திகதி நடைபெற்ற 67வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர்களின் இச்செயற்பாடு அதிருப்தியை அளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த துணைத்தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்திருந்தார்.
கட்சியின் கூட்டு பொறுப்பை மீறி சிற்றம்பலம் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அரசியல் நாகரீகமற்ற செயல் எனவும், புதிய அரசாங்கத்ததின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், த.தே.கூவின் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டது தவறு என சிற்றம்பலம் கூறியிருக்கும் விமர்சனம் அர்த்தமற்றது எனவும் கந்தைய்யா நடேசபிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தீர்க்கமான ஞானமும் சாணக்கியமும் நிறைந்த ஒருவர் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது தீர்மானங்களும் முடிவுகளும் பிரித்தானிய அரசியல் யாப்பில் கூறப்பட்டது போல் மன்னன் தவறு செய்வதில்லையென்ற கூற்றை ஒத்ததாகும்.
புதிய அரசாங்கத்தின் மூல கர்த்தாவாக விளங்கிய சம்பந்தன் மீது வட, கிழக்கு மக்கள் கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கைகள் எப்போதும் வீண்போக முடியாது. ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் மக்களை வாக்களிக்க சொன்னபோது வெளிக்காட்டாத எதிர்ப்பை சிற்றம்பலம் போன்ற சிலர் ஏன் இப்போது காட்ட முற்படுகின்றார்கள் என்பது புரியாத விடயம்.
3 தசாப்த யுத்தத்திலும் இத்தகைய அர்த்தமற்ற விமர்சனங்களினாலேயே எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தோம், பாராளுமன்ற நடைமுறைகளையும் அரசியல்யாப்பு சத்தியங்களையும் பின்பற்றும் நாம் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில் தவறில்லை என கந்தைய்யா நடேசபிள்ளை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அமைச்சுப்பதவிகளுக்கோ அதிகாரங்களுக்கோ சம்பந்தன் ஆசைப்பட்டவர் கிடையாது எனவும் அவர் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தவர் அல்ல எனவும் தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் நீடித்த நிலையான தீர்வுக்காக தியாகங்களை புரிந்து வரும் சம்பந்தனை இழிவுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கந்தைய்யா நடேசபிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum