Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்

Go down

சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்

Post by oviya on Mon Dec 21, 2015 1:16 pm

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பதை தவிர்த்து நடு நிலை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

இவர்கள் அடுத்த சில நாட்களில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராஜபக்ச அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பவித்ரா வன்னியாராச்சி, பிரேமலால் ஜயசேகர, ஜனக்க பண்டார தென்னகோன், மனுஷ நாணயக்கார, கீதா குமாரசிங்க, தேனுக்க வித்தான கமகே ஆகியோர் வரவு செலவுத்திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது சபையில் பிரசன்னமாய் இருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இவர்களில் கீதா குமாரசிங்க, மனுஷ நாணயக்கார, லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் அடுத்த சில தினங்களில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதுடன் மேலும் சிலர் ராஜபக்ச அணியில் இருந்து விலகி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum