Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா

Go down

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா

Post by oviya on Thu Nov 05, 2015 1:42 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனயீர்ப்பு மசோதா ஒன்றினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் சற்று முன்னர் சபையில் முன்வைத்துள்ளார்.
அவர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக காலத்தின் தேவையறிந்து விசேட பிரேரணையொன்றை இந்த உயரிய சபையில் முன்மொழிய வினைகின்றேன்.

2009ல் யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டபோதும் மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் பலவும் இதுவரை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இவற்றுள் நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையானது அவசரமானதும், அவசியமானதுமான பிரச்சினையாகும்.

பொதுவாக நாடுகளில் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று அவை பேச்சுவார்த்தை மூலமோ அன்றி போரின் மூலமோ முடிவடைந்த நிலையில், அரசியல் கிளர்ச்சியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்வது உலகமரபாகும்.

எனினும் எமது நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல்போராட்டத்தின் பின்னர் இவ்வாறான நடைமுறை பினபற்றப்படவில்லை.

குறிப்பாக 1970 மற்றும் 80 களில் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் முடிவுக் குகொண்டுவரப்பட்ட பின்னர்,

அதில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இவ்வாறான நடைமுறை தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னரும் அதன்பின்னரும் விடுதலை போராட்டத்திற்கு உதவினார்கள் அல்லது அதில் நேரடியாக ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்ட்டவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூன்று வகையினர் அடங்குகின்றனர்.

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விசரணைகள் எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டும் தீர்ப்புகள் இதுவரை வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குற்றமிழைத்தவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.

தற்போது ஆயுதப் போராட்டம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் உருவாவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அரசாங்கம் கூறிவரும் நிலையில் இவ்வாறாக தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதானது, எந்தவகையிலும் நியாயமாகாது.

குறிப்பாக போரிற்கு பின்னரான சூழ்நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவர்களின் மனைவி, பிள்ளைகள் துணையேதுமின்றி , வருமானமின்றி அன்றாட வாழ்க்கையையும் பிள்ளைகளின் கல்வியையும் கொண்டுசெல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கடந்த சனவரியில் இலங்கையில் புதிய அரசொன்று அமைக்கப்படுவதற்கு பிரதான காரண கர்த்தாக்களாக இருந்த தமிழ் மக்கள் புதிய ஆட்சியில் தமக்கான அரசியல் விமோசனம் கிட்டுமென்ற நம்பிக்கையிலேயே பெருவாரியான வாக்குகளை நல்லாட்சி அரசுக்கு வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரியாசனத்தில் அமர்ந்த புதிய நல்லாட்சி அரசானது ஆகக்குறைந்தது இவ்வாறாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமின்றி,

பொதுமன்னிப்பை வழங்கி உடனடியாக விடுதலை செய்து தனது நல்லிணக்க சமிஞ்சையை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்.

இதன்மூலம்தான் தென்னிலங்கை அரசின்மீது நம்பிக்கையிழந்த தமிழ்சமூகத்திற்கு புதிய நல்லாட்சி அரசில் நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதுடன் அரசியல் தீர்வைநோக்கிய நீண்ட பயணத்திற்கான அத்திவாரமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

இந்த உயரிய மக்கள் சபையினூடாக இந்த பிரேரணையை தயவுடன் முன்வைப்பதோடு சபையினரின் ஆதரவை கோரி நிற்கின்றேன்

என்றுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum