Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கண்டுபிடிக்கப்பட்டது தீவிரவாதிகளின் மாளிகையா? இவ்வளவு ஆர்ப்பரிப்பு! கடுப்பில் பிரசன்ன ரணதுங்க

Go down

கண்டுபிடிக்கப்பட்டது தீவிரவாதிகளின் மாளிகையா? இவ்வளவு ஆர்ப்பரிப்பு! கடுப்பில் பிரசன்ன ரணதுங்க

Post by oviya on Tue Oct 27, 2015 1:09 pm

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை தொடர்பில் தகவல் வெளியிட்டு அதில் அரசியல் அனுகூலங்களை பெற்றுகொள்ள முயற்சிப்பதற்கு கடுமையான கண்டனம் வெளியிடுவதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை, உடுகம்பொல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிய அளவிலான பாதிப்பேற்படுவதனை தவிர வேறு நன்மைகள் ஒன்று ஏற்படப்போவதில்லை.

ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றினைந்த ரணில் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேலும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இந்த தகவல்கள் வெளியிடப்படுகின்றதா என ஒரு சந்தேகம் எழும்புகின்றது.

பாதுகாப்பு உத்திகளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையை, அதிக பயங்கரமான தீவரவாதிகளின் மாளிகையினை கண்டுபிடித்ததனை போன்று அரசாங்கம் பிரசித்திபடுத்துகின்றது.

இந்த மாளிகை தொடர்பில் தகவல் வெளியிடுவதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படவுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு போலியான தகவல்களை பரப்புகின்றார்கள்.

எங்கள் மக்களும் இந்த பொய்களில் சிக்கிக்கொண்டார்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum