Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


பாவம் செய்தவர்களின் மறுபிறப்போ நாங்கள்

Go down

பாவம் செய்தவர்களின் மறுபிறப்போ நாங்கள்

Post by oviya on Mon Oct 26, 2015 1:25 pm

தமிழினத்தை விற்று விலைபோனவர்களை என்றோ ஒரு நாள் தமிழ் மக்கள் இனங்காண்பர் என்ற நம்பிக்கையைத் தவிர தமிழ்ப் பற்றாளர்களிடம் இப்போதைக்கு எந்த ஆறுதலும் கிடையாது.
எனினும் தமிழ் மக்கள் எந்தளவு தூரம் தங்களின் அரசியல் தலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றனர் என்றால் எதுவும் இல்லை என்று அடித்துக் கூறலாம்.

மாறாக, எங்கள் அரசியல் தலைமைகளின் போக்குபற்றி மக்களுக்குத் தெளிவு படுத்த புத்திஜீவிகள் எவரும் முன்வரவில்லை.

யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் ஒருவரை தேசியப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக நியமித்து அவருக்கு எம்.பி பதவி வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 150 விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கையயாப்பமிட்டு கூட்டமைப்பின் தலைமையிடம் மனுக்கொடுத்தமை அனைவரும் அறிந்ததே.

கூட்டமைப்புத் தலைமை அதனை ஏற்றுக் கொண்டு குறித்த பேராசிரியரை தேசியப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக்கி விட்டு எம்.பி பதவி யைக் கொடுக்காமல் விட்டுவிட்டது. ஆக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 150 புத்திஜீவிகளை மிக எளிமை யாக கூட்டமைப்பின் தலைமை ஏமாற்றியது.

எனினும் கையொப்பமிட்ட 150 புத்திஜீவிகள் மெளனமாக இருந்தனர். இதில் அதிசயம் என்ன வென்றால், 150 புத்திஜீவிகளையும் சுலபமாக ஏமாற்றலாம் அதனால் எந்தப் பாதிப்பும் தமக்கு ஏற்படாது என்பதை கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை அறிந்து வைத்திருந்ததுதான்.

இதற்காக கூட்டமைப்பின் கொழும்புத் தலைமையை பாராட்ட முடியும். இதற்கு அப்பால், யாழ்ப்பாணத்து புத்திஜீவிகள் எங்களுக்கு வால் ஆட்ட முடியாது என்ற தடிப்பும் அங்கு இருந்தது என்பதையும் ஏற்றுத்தானாக வேண்டும்.

நிலைமை இதுவாக இருக்கும் போது, தமிழ் அரசியல் தலைமையின் போக்குக் குறித்து எங்கள் புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிப்பர் என்றோ! அந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களை திசைமுகப்படுத்தும் என்றோ! நினைப்பது மடமைத்தனம்.

இது தவிர சிவில், சமூகம் என்றொரு அமைப்பு எங்களிடம் இருப்பதாகக் கேள்வி. அந்த அமைப்பு இன்னமும் தன்னை வெளிக்காட்டவில்லை.

தமக்கு ஆத்திரம் ஊட்டக்கூடிய விடயங்களில் மட்டும் அறிக்கை வெளியிட்டு விட்டு அந்த அறிக்கை யோடு அடங்கிப் போகின்ற நிலையிலேயே சிவில் அமைப்பின் சிறு பணி இருப்பதை பார்க்க முடியும்.

உண்மையில் தமிழ் அரசியல் தலைமைகளின் போக்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிவில் சமூ கத்தின் காத்திரமான பணி தேவைப்படுவதாயினும், தத்தம் தேவைகள் முடிய, ஓய்வுநேரம் கிடைத்தால் ஏதேனும் அறிக்கை விடுதல் என்ற கொள்கையோடு இயங்கும் சிவில் சமூகமும் தமிழ் மக்களுக்கு உதவ வில்லை.

பாராளுமன்றத்தில் இடம்பிடித்த தமிழ் அரசியல் தலைமையினர் தகிடு தத்தம் போடுகின்றார்கள் என்றால், வடக்கு மாகாண சபையில் இருக்கக்கூடிய முக்கியமான சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பதான தகவல்களை அறியும்போது தலை சுற்றுகிறது. (இதன் உண்மைத் தன்மை ஆராய வேண்டும்.)

கடவுளே! தமிழர் அரசு மலரவேண்டும் என்பதற்காக நடந்தும் இருந்தும் கிடந்தும் தவழ்ந்தும் சென்று வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்கின்ற கைமாறா இது?
இறைவா! ஏன்தான் எங்கள் இனத்திற்கு இப்படி ஒரு நிலைமை.

இலங்கைத் தமிழர் என்றவுடன் சீனா எதிர்க்கிறது, இந்தியா ஏமாற்றுகிறது, அமெரிக்கா எகிறுகிறது, ஜப்பான் கடிகிறது, பாகிஸ்தான் பகைக்கிறது எதற்காக? நாங்கள் என்ன பிழை செய்துவிட்டோம்.

எங்களின் விடயத்தில் மட்டும் உலக நாடுகள் தங்கள் பகைமைகளை ஒத்திவைத்துவிட்டு ஒன்று சேர்ந்து விடுகின்றனவே.

இந்த துன்பத்தில் எங்கள் வாக்குகளில் வெற்றி பெற்ற எங்களவர்களும், சிங்களவர்களும் எங்க ளுக்கு எதிராக...

இறைவா! இந்த உலகத்தில் பாவம் செய்தவர் களின் மறுபிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் படைத்துப் பழி தீர்க்கிறாயா? சொல்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum