Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர்களின் கல்வியை வேறறுக்க அரசியல் சதிவேலைகள்! வட மாகாண முதல்வர் காட்டம்

Go down

தமிழர்களின் கல்வியை வேறறுக்க அரசியல் சதிவேலைகள்! வட மாகாண முதல்வர் காட்டம் Empty தமிழர்களின் கல்வியை வேறறுக்க அரசியல் சதிவேலைகள்! வட மாகாண முதல்வர் காட்டம்

Post by oviya Sun Sep 20, 2015 1:49 pm

எமது சமூகத்தின் கல்விச் செல்வத்தை மூலவேருடன் தகர்த்தெறிய திட்டமிட்ட அரசியல் சதிவேலைகள் எம்முன்னே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோ என்று எண்ணுவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துன்னாலை கோவிற்கடவை சனசமூக திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோவிற்கடவை சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டடத்திறப்பு விழாவிற்கு என்னை பிரதம விருந்தினராக அழைத்தமைக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் இருந்து எமது மக்கள் அனைவரையுஞ் சென்று பார்த்து அளவளாவி அவர்களின் பிரச்சினைகளை அறிந்து இயலக்கூடிய பரிகாரங்களைத் தேட வேண்டும் என ஆவல் கொண்டிருந்த போதும் தொடர் வேலைப்பழுக்கள் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றின் காரணமாக நாம் நினைத்த விடயங்கள் அனைத்தையும் விரைவாக செய்ய முடியவில்லை. எனினும் உங்கள் அன்பான அழைப்பை ஏற்று இன்று இங்கே வந்திருக்கின்றேன். இதற்கு முன்னரும் சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களிற்கு முன்னர் ஓர் திறந்த வெளி அரங்கக் கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நான் உங்கள் கிராமத்திற்கு வந்திருந்தேன். திரும்பத் திரும்ப வருவதைப் பார்த்தால்
எங்கள் அலுவலர்களின் சதியோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனென்றால் எங்கள் செயலாளர்கள் மூன்று பேர் உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்! மீண்டும் இன்று இங்கு வந்து உங்களது சனசமூக நிலையத்தை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்ற விழைகின்றேன்.

இக்கோவிற்கடவை சனசமூக நிலையமானது 1979களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மிகப்பெரிய அளவில் சுமார் 8 மில்லியன் ரூபாவை செலவு செய்து இப்பொழுதுதான் இப்புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் நூலக சேவைப் பகுதி, நூல்கள் இரவல் வாங்கும் பகுதி, கணணி அலகு, இலவச மருத்துவ சேவைப் பகுதி, யோகாசனப்பயிற்சி வகுப்புக்கள் பகுதி, உடற்பயிற்சிக் கூடம் எனப் பல்வேறு பகுதிகளைக் கொண்ட ஒரு கட்டடத் தொகுதியாக இது அமைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. உங்கள் உடற்பயிற்சிக் கூடத்தைப் பார்வையிட்ட போது அங்கு Treadmill எனப்படும் நடை இயந்திரம் இல்லாதிருந்ததைக் கண்டேன். என் போன்ற வயோதிபர்களுக்கு அதுதான் உகந்த பயிற்சியந்திரம். இந்தியா அதில் ஒன்றை கொடுத்து உதவ வேண்டும் என்று நண்பர் நடராஜன் அவர்களைக் கேட்டேன். தருவதாகக் கூறினாரோ மாட்டேன் என்றாரோ நான் அறியேன்!

இதுவரை செய்தவற்றிற்கான நிதி மூலம் உள்ளுரிலும் வெளிநாட்டிலும் உள்ள இப்பகுதி மக்கள் மூலமாகவே திரட்டப்பட்டதென அறிகின்றேன். பல சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி வருகின்றன. அவர்களுக்கு உதவி புரிவதற்கு எமக்கு மனம் இருக்கின்ற போதிலும் நிதி மூலங்களைக் கண்டறிய முடியாமையினால் அல்லது பெற்றுக் கொள்ள முடியாமையினால் உடனடியாக அனைவருக்கும் உதவி செய்ய முடியாமல் உள்ளது.
அதனால்த்தான் நண்பர் நடராஜனைக் கொடைவள்ளலாகச் சித்திரித்து அவரிடம் கேட்டேன்.

ஆனால் முயற்சித்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணமாக விளங்குகின்றீர்கள். எந்த வித கோரிக்கைகளும் எவரிடமும் விடுக்காமல் நீங்களாகவே நிதியைத் தேடி உங்களுக்குரிய சனசமூக நிலையத்தை அமைத்திருக்கிறீர்கள். “தன் கையே தனக்குதவி” என்பதற்கேற்ப மக்கள் முடியுமானவரை அரசாங்கத்தை எதற்கும் எவற்றிற்கும் எதிர்பார்த்துக் கொண்டிராமல் தனியார் துறையுடன், தனிமனிதர்களுடன் சேர்ந்து
முன்னேறுவதுதான் இன்றைய காலகட்டத்தில் உசிதம் என்று எனக்குப் படுகிறது. காரணம் அரசியலானது மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சனைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படும் வரை எம் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய திட்டங்களுக்கேற்ப எமது வெளிநாட்டு, உள்நாட்டு உறவுகளின் உதவியுடன் முன்னேறுவதுதான் உசிதம் என்று எனக்குப் படுகிறது. அத்துடன் எமக்குக் கிடைக்கும் நிதியம் மிகச் சொற்பமே. மேலும் எமது வருமானத்தை அதிகப்படுத்த சட்ட திட்டங்களை இப்போது உருவாக்கி
வருகின்றோம். அங்கும் நியதிச் சட்ட திட்டங்களை உருவாக்கக் கூடிய திறன் மிகுந்த அலுவலரின் பற்றாக்குறை எம்மைப் பாதித்துள்ளது.

எங்களில் பலர் சனசமூக நிலையம் என்பது வாசிகசாலை ஒன்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு என்ற தவறான கருத்தை கொண்டிருக்கின்றார்கள். வாசிக சாலை வேறு, சனசமூக நிலையங்கள் வேறு. ஒவ்வொரு சனசமூக நிலையங்களும் தமது பகுதியில் உள்ள வளங்கள், தேவைகள் ஆகியவற்றை இனங் கண்டு அவற்றின் உச்சப் பயன்பாட்டை மற்றும் தேவைகளின் தன்னிறைவைக் காணமுற்படும் போது தான் அதனுடைய செயற்பாடுகள் சிறப்பானதாக அமையும். அந்த வகையில் உங்களுடைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுவிடாது பல்வேறு தரத்தினருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு செயற்பாடுகளுடன் திட்டமிடப்பட்டிருப்பது மிகவும் முன்மாதிரியான செயற்பாடாகும்.

முன்பள்ளிச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கலும் அதனை நிர்வகித்தலும்.

மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை நடாத்துதல்.

விளையாட்டுக் கழகச் செயற்பாடுகளை ஊக்குவித்தலும் நிர்வகித்தலும்.

ஆலயம் சார்ந்த திருப்பணிக்கு உதவுதல்.

சமூகம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றுதல்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குதல்.

வறுமையில் உள்ள மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு.

வருடாந்த பரிசளிப்பு விழாக்களை நடாத்துதல்.

என அனைத்துத் துறைகளையும் உள்வாங்கி ஒரு முழுமையான சனசமூக நிலையமாக உங்கள் நிலையம் மிளிர்வது எமது மனதுக்குப் பேருவகையளிக்கின்றது. மக்கள் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு வேலைத்திட்டமும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. அது அரசியலாக இருக்கட்டும், சமூக மேம்பாடாக இருக்கட்டும் அல்லது கிராம அபிவிருத்தியாக இருக்கட்டும் மக்களின் பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்ற போது இவை அனைத்து சம்பந்தப்பட்ட வேலைத்திட்டங்களும் முழுமை பெறுகின்றன. ஆனால் அரசியலும் தனிப்பட்ட குரோத உணர்ச்சிகளும் எமது நடவடிக்கைகளில் உள்வராது தடுக்க வேண்டியது அவசியம்.

அன்பார்ந்த பிள்ளைகளே, பெரியோர்களே, இந்த சனச நிர்வாகத்தினரே! உங்கள் அனைவருக்கும் அன்பான விண்ணப்பம் ஒன்றை உங்கள் முன்வைக்க விரும்புகின்றேன். மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகளின் ஒழுக்கப் பாடானது இன்று எம்முன்னே பரந்து விரிந்து கிடக்கின்ற ஒரு பாரிய விடயமாக உள்ளது. எமது பிள்ளைகளை அல்லது எம்மைச் சார்ந்த பிள்ளைகளை எவ்வாறு ஒழுக்க சீலர்களாக மாற்றுவது என்பது எம்முடைய
கவனத்தை ஈர்க்க வேண்டும். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பாதிக்கக்கூடிய அடிப்படைக்காரணிகள் யாவை? போதைப்பொருட்கள் எவ்வாறு மாணவர்களின் கைகளுக்குக் கிடைக்கின்றன? அதற்கான பணம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது? போன்ற பல விடயங்களில் நாம் கண்ணுங் கருத்துமாக இருந்து விடைகாண வேண்டும்.

எமது சமூகத்தின் அழியாச் செல்வமாக விளங்கக்கூடிய கல்வி என்ற பெரிய சொத்தை எவ்வாறாவது அதன் மூலவேருடன் தகர்த்தெறிந்து எம்மைக் கையாலாகாதவர்களாக மாற்றி அடிமைச்சீவியம் நடாத்தக்கூடிய கீழ்நிலைச் சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிட்ட அரசியல் சதிவேலைகள் எம்முன்னே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோ என்று எண்ண இடமுண்டு. இதிலிருந்து நாம் தப்புவதற்கு எமது பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கு நாம் ஆவன செய்ய
வேண்டும்.

இன்று பத்திரிகைகளை புரட்டினால் கொலை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம் எனப் பக்கம் பக்கமாகச் செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் பண்பட்ட சமுதாயமாக சிறந்த பழக்க வழக்கங்களுடன் கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்தச் சமூகம் சீர்கெட்டுப் போவதை, வேண்டும் என்றே திட்டமிட்டு அழிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு வாழாதிருக்க முடியாது. இவ்வாறான செயல்களை கண்காணிக்கக் கூடிய அல்லது தடுக்கக்கூடிய சக்தி இவ்வாறான சனசமூக நிலையங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்து விடலாகாது.

இதன் காரணமாகவே பொலிசாருடன் பொது மக்கள் சேர்ந்து எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அதற்கான குழு அமைக்க வேண்டியவற்றைச் செய்து வருகின்றோம். விரைவில் மேல்மட்ட, நடுத்தர, கீழ்மட்ட குழுக்கள் செயற்பட இருக்கின்றன. மேல்மட்டக் குழு பிரதிப் பொலிஸ்மா அதிபர் - அமைச்சர்கள் மட்டத்தில் ஆராயும். மத்திய அல்லது நடுத்தரமட்டக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - நியமிக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் மட்டத்தில் ஆராயும். மக்களிடையே கீழ்மட்டத்தில் செயற்பட இருக்கும் குழுக்களில் சனசமூக நிலைய அலுவலர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

எனவே அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் இவ்வாறான போதைப்பழக்க வழக்கங்களுக்கும் களவு, கொள்ளை, சூது போன்றவற்றிற்கும் ஆளாவதாகக் தெரிய வந்தால் அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லப் பாருங்கள், அவர்களை அவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுபட்டுச் செல்வதற்கு பாடுபடுங்கள். இல்லை என்றால் எங்கள் குழுக்களிடம் உங்கள் கல்லூரிகள் மூலமாக எடுத்துச் சொல்லுங்கள். முயற்சித்தால் ஆகாதது ஒன்றுமில்லை எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிபர்கள் அரசியல் வாதிகளுக்கு பின்னால் செல்லாது மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: முதலமைச்சர் காட்டம்
» இந்திய வம்சாவளித் தமிழர்களின் விகிதாசாரத்துக்கேற்ப அரசியல் பிரதிநித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்: திகாம்பரம்
» கிழக்கு மாகாண சபைக்கு 13வது அரசியலமைப்பு முழுமையாக வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஹாபீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum