Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி மலர்தூவ முடியாத எமக்கு மாலைகள் பட்டாசுகள் எதற்கு? சிறீதரன் ஆதங்கம்

Go down

மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி மலர்தூவ முடியாத எமக்கு மாலைகள் பட்டாசுகள் எதற்கு? சிறீதரன் ஆதங்கம்

Post by oviya on Tue Sep 08, 2015 2:55 pm

எமக்காக போராடிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி மலர் தூவ முடியாத எமக்கு மாலைகள் பட்டாசுகள் எதற்கு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றம் நடாத்திய வருடாந்த மாபெரும் கலைவிழா கடந்த ஆறாம் திகதி நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட அவர்,

கலைத்துறை சார்ந்த ஈடுபாடும் ஆற்றலும் எம் சமூகத்துக்கு அவசியமான ஒன்று. இன்னல் கண்டு குமுறுகின்ற பெரும்பாலானவர்கள் கலைஞர்கள் படைப்பாளிகள் என்ற அடிப்படை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் கலை இரசனையுடையவர்களாக இருக்கின்றார்கள்.

கலைத்துறை ஒரு அடையாளமாகவே எமது பண்பாட்டில் இருந்து வந்துள்ளது. கலை எமது அடையாளங்களை வாழ்வை காவிக்கொண்டு ஒரு காலக்கடமையை செய்திருக்கின்றது. ஆடலும் பாடலும் நம் வாழ்வோடு தொன்று தொட்டு இணைந்து வந்த ஒன்று.

ஆடலும் பாடலும் காலக்கண்ணாடியாக நம் இனத்தை பறைசாற்றியிருக்கின்றது. ஆகவே இவை ஊக்குவிக்கப்படவேண்டும். இதை சிறப்பாக இந்த சங்கானை மண்ணும் செய்வதாகவே உணர்கின்றேன்.

தனி மனித வணக்கங்களுக்கு அப்பால் எமது மண்ணுக்காக தியாகம் செய்த தியாக சீலர்களை வணங்கும் பண்பாடு காக்கப்படவேண்டும். மாலைகளும் பட்டாசுகளும் எதை தரப்போகின்றன எமக்கு.

எமக்காக போராடிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி மலர் தூவ முடியாத எமக்கு மாலைகள் பட்டாசுகள் எதற்கு.

எனவே தான் மக்களே! எமது அடையாளங்களை கலையூடாக சிறப்பாக கொண்டு செல்ல களங்களை பயன்படுத்தவேண்டும்.

அதை இந்த சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றம் செய்கின்றது. அதன் பணி இனியும் தொடரும் என நினைக்கின்றேன். ஒத்த சிந்தனையுடைய நால்வரால் இந்த உலத்தை மாற்ற முடியும் என விவேகானந்தர் சொன்னார்.

நாமும் ஒத்த சிந்தனையுடைய மனிதர்களை இனங்கண்டு இணைத்து மாற்றங்களை உண்டாக்கவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் மற்றும் சங்கானை இந்து இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலைஞர்கள் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum