Top posting users this month
No user |
Similar topics
ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் மெட்ரோ ரயில் நிலையம்: விமான பயணிகளுக்கு வசதி
Page 1 of 1
ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் மெட்ரோ ரயில் நிலையம்: விமான பயணிகளுக்கு வசதி
சென்னை செண்ட்ரலில் பிரமாண்டமாக அமையும் மெட்ரோ ரயில் நிலையங்களில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அங்கேயே சோதனைகளை முடிக்கும் வசதி செய்யப்பட உள்ளது. |
சென்னை மாநகரில், வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017–ம் ஆண்டுக்குள் முழு அளவில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழித்தடத்திலும் மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆலந்தூரில் உயர்மட்ட பாதையில் 2 ரயில் நிலையங்களும், சென்டிரலில் சுரங்க பாதையில் அமைந்து வரும் 2 அடுக்கு ரயில் நிலையங்களும் ரூ.400 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையங்களிலேயே வணிக வளாகங்கள், வாகன நிறுத்தும் இடம் ஆகியவை அமைகின்றன. மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்ட்ரலில் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் 2 மெட்ரோ ரயில் நிலையங்களும் பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும்போது, விமான பயணிகளும் மெட்ரோ ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, விமான பயணிகளுக்கு வசதியாக, அவர்களின் உடமைகளை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே சோதனை செய்து அனுப்ப சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால், சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலேயே விமான நிலைய ஆணைய அலுவலகம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். |
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது விபத்து: சாலையில் சென்ற நபர் பரிதாப மரணம்
» ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வசூலை அள்ளிய சென்னை மெட்ரோ
» இந்தியாவில் வைஃபை வசதி செய்யப்படவுள்ள முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியல்
» ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வசூலை அள்ளிய சென்னை மெட்ரோ
» இந்தியாவில் வைஃபை வசதி செய்யப்படவுள்ள முதல் 100 ரயில் நிலையங்களின் பட்டியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum