Top posting users this month
No user |
தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு கொட்டகலையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்
Page 1 of 1

ஹற்றன், கொட்டகலை சுகாதார வைத்திய பிரிவினால் தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சத்துணவு மற்றும் பாதுகாப்பான உணவு முறைகளை முன்னெடுத்தல் தொடர்பான நிகழ்வுகள் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது சுகாதார அமைச்சின் திட்டத்துக்கு அமைய 'அதிகபலம், ஆற்றல் மற்றும் உற்பத்தி திறனுக்கு ஆரோக்கியமான உணவுகள்' எனும் தொனிப் பொருளின் கீழ் பாடசாலைகளில் சிற்றூண்டிச்சாலைகள் நடத்துவோர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகமும், பேரணியும் நடத்தப்பட்டது.
இப்பேரணியானது கொட்டகலை ரயில் கடவையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானம் வரை சென்று அங்கு தேவஸ்தானத்திற்கு முன்பு வீதியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இந் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன, கொட்டகலை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum