Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டு. தபால் ஊழியர்கள்

Go down

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டு. தபால் ஊழியர்கள் Empty பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டு. தபால் ஊழியர்கள்

Post by oviya Thu Apr 30, 2015 1:28 pm

மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பிரதான தபாலகத்துக்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

தபால் திணைக்களத்தில் அண்மைக்காலமாக காணப்படும் சம்பள முரண்பாடு மற்றும் நிர்வாக ரீதியான முரண்பாடுகளை நீக்ககோரியே இந்த அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் அரச சுற்றறிக்கையில் உருவாக்கிய முரண்பாடுகளை உடனடியாக நீக்கு, சம்பள முரண்பாட்டை நீக்கு, தரம் 1,தரம் 2 சம்பள முரண்பாடுகள் நீக்கப்படவேண்டும் போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

தபாலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி அதன் சேவையினை சிறந்த முறையில் கொண்டுசெல்ல புதிய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமது நியாயமான கோரிக்கைகளை புதிய அரசாங்கம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் தபாலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தபாலகத்தின் சேவைகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum