Top posting users this month
No user |
Similar topics
ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து! துணை விமானி பற்றிய புதிது புதிதாக வரும் 'திக் திக்' தகவல்கள்
Page 1 of 1

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானிக்கு தொடர்ந்து உளவியல் சிகிச்சை அளிக்குமாறு லுப்தான்ஸாவின் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸுக்கு சொந்தமான விமானத்தை வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி 150 பேர் பலியாக காரணமாக இருந்தவர் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28).
அவர் ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகர் அருகே இருக்கும் மான்டபாரைச் சேர்ந்தவர். அவர் 14 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் 2008ம் ஆண்டு லுப்தான்ஸாவின் விமானி பயிற்சி படிப்பில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் இருக்கும் லுப்தன்ஸா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.
2009ம் ஆண்டு லுபிட்ஸ் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதை லுப்தான்ஸாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என்று லுப்தான்ஸாவில் பணிபுரிந்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லுபிட்ஸின் மருத்துவ கோப்புகள் விமானம் விபத்துக்குள்ளான 3வது நாள் தான் தங்கள் கைகளுக்கு வந்ததாக ஜெர்மனியின் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லுபிட்ஸ் உடல் மற்றும் மன பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
லுபிட்ஸ் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்பே அவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. துணை விமானி ஆன பிறகு அவர் இயல்பாக நடந்து கொண்டுள்ளார் என்று ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் லுபிட்ஸுக்கு தன்னையோ பிறரையோ காயப்படுத்தும் எண்ணம் இருப்பதற்கான அறிகுறிகள் எதையும் மருத்துவர்கள் கண்டறியவில்லை. அவர் உளவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரை சம்பவத்தன்று உள்பட பல முறை வேலையில் இருந்து விடுப்பு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமானி அறைக்குள் வைத்து கேப்டனை தாக்கிய துணை விமானியால் பரபரப்பு
» மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்
» போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல்வாதி பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum