Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பகவான் சத்ய சாய்பாபா - (13)

Go down

பகவான் சத்ய சாய்பாபா - (13)        Empty பகவான் சத்ய சாய்பாபா - (13)

Post by oviya Fri Apr 10, 2015 3:02 pm

நடந்தே கமலாப்பூர் வந்து சேர்ந்துவிட்டார் அவர். எந்த வகையிலும் அவர் தன் பெற்றோரை சிரமப்படுத்த நினைத்ததில்லை. இந்தக்கால மாணவர்கள் பாபாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரது அண்ணன் சேஷமராஜூ பெண் எடுத்த ஊர் தான் கமலாப்பூர். தன் மாமனார் வீட்டில், தம்பியை தங்கச் செய்து உயர்நிலைக்கல்விக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இதைப்பயன்படுத்தி, பாபா அந்த வீட்டாரிடம் பணஉதவி எதுவும் கேட்டதில்லை. அதுபோல் நண்பர்களிடமும் பணம் கேட்டதில்லை. சிறுபையனாக இருந்தபோதே உழைக்கத் துவங்கிவிட்டார்.
சிலதிறமைகள் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இளமைப்
பருவத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால் தான் நமது மாணவர்கள் முன்னேறுவதில்லை. ""அமெரிக்காவில் மாணவர்கள் கார் துடைத்து சம்பாதிக்கிறார்கள், ஜப்பானில் ஓய்வுநேரத்தில் வேலைக்கு போகிறார்கள், '' என்று புத்தகங்களில் படிக்கிறார்களே தவிர, நாமும் அப்படி செய்தால் என்ன என்று பெரும்பாலானோர் விரும்புவதில்லை. பெற்றோரும் அதை கவுரவக்குறைவாகவோ, படிப்பு பாதிக்கும் என்றோ தான் கருதுகிறார்கள்.
பாபா அப்படியில்லை.... அவர் சிறுசிறு வேலைகளைச் செய்தார். அதில் கிடைத்த பணத்தில் படித்தார். அண்ணன் சேஷமராஜூ திடீரென அனந்தப்பூருக்கு படிக்கச் சென்றுவிட்டார். தெலுங்கில் வித்வான் பட்டம் பெறுவது அவரது நோக்கம். எனவே படிப்பு நீங்கலான மற்ற செலவுகளுக்கு பாபாவுக்கு பணம் கிடைப்பதில்லை. பாபாவும் அனாவசியமாக செலவழிப்பதை விரும்பவில்லை.
சிறுவயதில் மனஅடக்கம் இருப்பது கடினம். குழந்தைகளுக்கு எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இருக்கும். ஆனால், பாபா அப்படி எதையும் விரும்பவில்லை. மனக்கட்டுப்பாடு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது. இதை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, பாபா தன் வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
இதரவகை செலவுகளை சமாளிக்க பாபாவே சம்பாதிக்க துவங்கிவிட்டார். ஒரு முறை அவர், காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அதை பின்பக்கமாக வந்த நண்பன் ஒருவன் படித்துவிட்டு சிரித்தான். ""சத்யா! நீ பாட்டெல்லாம் கூட எழுதுவியா?''
பாபா அவன் வந்ததை அப்போது தான் அறிந்தவராய், ""உம்! அப்பப்ப பாட்டு எழுது வேன். இது குடைப்பாட்டு. இங்குள்ள வியாபாரி குப்பண்ணா ஒரு "டெக்னிக்' வைத்திருக்கிறார். அதாவது தன் கடைமுன்பு குழந்தைகளை நிறுத்தி, தன் கடையிலுள்ள பொம்மை, குடை, பேன்சி பொருட்களைப் பற்றி பாட வைக்கிறார். அவர்கள் பாட நல்ல பாட்டாக நான் எழுதி கொடுக்கிறேன். இவை விளம்பரப் பாடல்கள். இதை எழுதினால், அவர் எனக்கு பணமோ, பொருளோ தருவார். இதை வைத்து நான் பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
மகான்கள் சிறுவயது முதலே மானிடர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். நமது மாணவர்களும் தங்களால் முடிந்த வேலையை செய்து தங்கள் ஓராண்டு படிப்புச் செலவை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இந்தக்காலத்தில் எவ்வளவோ சிறு வேலைகள் காத்துக் கிடக்கின்றன. மாணவர்கள் பாபாவைப்போல வாழ்வில் முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இதற்கு சாயியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
பாபா சிறுவயதில் பஜனைப் பாடல்கள் மட்டுமல்ல.... தன்னை அன்போடு ஊட்டி வளர்த்த சுப்பம்மாவின் கணவர் பற்றியும் கூட ஒரு பாட்டு எழுதினார். அவர் கிராமகர்ணம் என்பதால் தோரணைக்காக பெரிய மீசை வைத்திருந்தார். அதைக் கேலி செய்து பாபா ஒரு பாட்டு பாடினார். அதோடு அவர் மீசையை எடுத்துவிட்டார்.
இப்படி பாபா எழுதிய குறும்புப்பாடல்களும் உண்டு.
குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். எதாவது படம் என்ற பெயரில் கிறுக்கித் தள்ளுவார்கள். இதை நாம்
தடுக்கக்கூடாது. காரணம்,
அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இந்த
கிறுக்கல் படைப்புகள் மிக உயர்ந்தது. இதை தடுக்காமல் இருந்தால் ஒரு சிலராவது சிறந்த படைப்பாளிகளாக வருவர் என்பது உறுதி. பாபா சிறுவயதில் குறும்பாக எழுதிய பாடல்கள், காலப் போக்கில் அவரது கற்பனைத் திறனை விளம்பரப் பாடல்கள் எழுதும் அளவு உயர்த்திவிட்டது. அது சிறு வருமானத்தையும் தந்தது.
அன்று மாலையில் பாபாவின் குடைப்பாட்டு ஊரில் பிரபலமானது.
""எடுத்து விரித்து பிரிக்கலாம், மடக்கி கையில் சுருட்டலாம்,'' என எதுகை மோனையுடன் எழுதி இருந்ததைக் கேட்டு, மக்கள் அந்தப்பாட்டில் மனம் லயித்தனர். கூட்டம் குவியவே, குப்பண்ணாவுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. யாருமே எதிர்பாராத பொழுதாக அன்று கமலாப்பூருக்கு விடிந்தது. தெய்வம் சில நாட்கள் புட்டபர்த்தி கிராமத்தில் இருந்தது. சில காலம் கமலாப்பூர் என்ற சிறு நகரத்தில் இருந்தது. இப்போது அண்ணன் சேஷமராஜூவுக்கு வித்வான் படிப்பு முடிந்து, உரவகொண்டா என்ற ஊரில் வேலை கிடைத்தது. அதுவும் ஆசிரியர் பணி, தான்
பணியாற்றும் பள்ளியிலேயே தம்பியையும் சேர்த்துவிட அவர் முடிவு செய்துவிட்டார்.
பாபாவுக்கு வேதனை! புட்டபர்த்தியிலுள்ள நண்பர்களைப் பிரிந்தாயிற்று. இன்று
கமலாப்பூர் நண்பர்களையும் விட்டுபிரிய வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. விளையாட்டு ஆசிரியர் இந்தத் தகவலைக் கேட்டு அழுதே விட்டார். ஊர்முக்கிய பிரமுகரின் மகன்கள் இருவரும், பாபாவைக் கட்டிப்பிடித்து அழுதனர். ""சத்யா... எங்க அப்பா இந்த ஊர் சிரஸ்தார். எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. ஆனா உன்னைப் போல நல்ல நண்பன் இல்லை. நீ இங்கேயே படி, எங்களை விட்டு போகாதே,'' எனக்கதறினர்.
பாபா அமைதியாக
அவர்களைத் தேற்றி, ""உங்கள் பணத்தில் படிப்பதை என் அண்ணனோ, நானோ விரும்பமாட்டோம். இங்கேயே
தனியாகத் தங்கிப்படிப்பதை அம்மாவும் விரும்பமாட்டாள். தங்கிப் படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை,''
என்றார். அவர் வாய் அப்படி சொன்னதே ஒழிய, அந்த நண்பர்களைப் பிரிய அவருக்கும்
விருப்பமில்லை. ஆனாலும், பொங்கி வந்த கண்ணீரை இமைகளிலிருந்து கீழே விழாமல் அடக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.
உரவுகொண்டா நகரம்... பாபாவுடன் உறவு கொள்ள
தயாராக இருந்தது. ஆனால் அவர் படிக்கப் போகும் பள்ளியிலோ, ஆசிரியர்களுக்குள்
ஒரு பெரிய தகராறே நடந்து கொண்டிருந்தது.
தலைமை ஆசிரியரின் அறையில், ""சார்... அந்த சத்யாங்கிற பையன் நம்ம ஸ்கூலுக்கு வந்தா...'' என ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அதைக் கேட்டு மற்ற ஆசிரியர்கள் கொதித்தார்கள். ""முடியாது, முடியாது... அதெல்லாம் முடியாது... அந்தப் பையனை என் கிளாஸிலே...'' என்று கூச்சல் தொடர்ந்தது. பாபா அந்தப் பள்ளியில் சேரும் முன்பே அங்கு என்ன நடக்கிறது?
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum