Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார்

Go down

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார்

Post by abirami on Sat Mar 21, 2015 9:01 pm* உடலுக்குத் தலை முக்கியமானது. அதில் சிறந்த உறுப்பான கண்ணில் கருணை நிறைந்து விட்டால் அதைவிடச் சிறப்பு வேறில்லை.
* சூரியன் பகலிலும், சந்திரன் இரவிலும் உலகிற்கு ஒளியூட்டுவது போல, நல்ல குணமுள்ள பிள்ளைகள் பிறந்த குடியை விளங்கச் செய்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தெய்வத்துக்கு ஒப்பிடப்படுகிறார்கள்.
* ஆயிரக்கணக்கில் ஆபரணங்கள் இருந்தாலும், சொன்ன வாக்கை காப்பாற்றுவதே சிறந்த ஆபரணமாகும்.
* குழந்தை போல கபடமற்ற மனம் படைத்தவர்கள் பக்தியின் மூலம் கடவுளைத் தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள்.
* எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது. அதனால், மனதில் எப்போதும் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* நிழல் எப்போதும் நம்மைப் பின் தொடர்வது போல, செய்த செயலின் பலனும் ஒருவனைப் பின்தொடரும்.
* நல்ல நூல்களைத் தினமும் படியுங்கள். இதனால், அறிவும், ஆற்றலும் விசாலமடைகின்றன.
* பொன்னையும், பொருளையும் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. சத்தியம், தர்மம் போன்ற நற்பண்புகளையே எதிர்பார்க்கிறார்.
* உண்மையைக் காட்டிலும் சிறந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் கொடிய அதர்மம் இல்லை.
* பிறர் குற்றம் பொறுப்பது மனிதத்தன்மை. அதை மன்னித்து மறப்பது தெய்வத்தன்மை.
* சிரித்த முகம், இனிய சொல், நேர் கொண்ட பார்வை இவையே நல்ல மனிதனின் அடையாளம்.
* நல்ல செயல்களில் ஈடுபடும் போது பாவம் செய்ய நேரிட்டாலும் அதனால், பாதிப்பு ஏதும் உண்டாகாது.
* படிப்பினால் உண்டாகும் அறிவை விட, அனுபவத்தில் கிடைக்கும் அறிவு பன்மடங்கு மேலானது.
* நல்லவர்களின் நட்பைத் தேடிச் சென்றாவது பெற முயலுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்வில் வளர்ச்சிக் காலம் வந்து விட்டதாக அர்த்தம்.
* நல்லவர்கள் நல்வாழ்வு பெறுவது திண்ணம். அவர்களின் புகழை மூவுலகிற்கும் தெரியப்படுத்துவது கடவுளின் பணியாகும்.
* கோபம் வரும் சமயத்தில் கண்ணாடியில் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். வெட்கத்தினால் கோபம் மாறி சாந்த குணம் வந்து விடும்.
* உழைக்காமல் கிடைக்கும் நெய் அன்னத்தை விட, சுயமுயற்சியால் கிடைக்கும் தண்ணீரும், சோறும் மேலானது.
* ஏழைகளுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். அவர்களின் சிரிப்பில் கடவுளையே நீங்கள் காணமுடியும்.
* பாவத்தைப் பிறரிடம் கூறி வருந்துவதால் அதன் தீவிரம் குறையத் தொடங்கும்.
* எல்லா உயிர்களுமே கோயிலுக்கு சமம் தான். அதனால், அனைவரையும் கடவுளாக மதியுங்கள்.
* "இல்லை' என மறுக்கும் நாத்திகன் மீதும் அன்பு காட்டுபவராக கடவுள் இருக்கிறார்.
* விலங்குகளில் இருந்து மனிதன் உயர்ந்து நிற்பது தெய்வ உணர்ச்சி ஒன்றினால் தான்.
* கடவுள் நமக்கு எது செய்தாலும் அது அருள் தான். சிலசமயம் துன்பம் போல தோன்றுவது நம் அறியாமையால் தான்.
* செய்த செயல்களின் பலனே அடுத்த பிறவியில் பாவபுண்ணியமாக ஒருவரைச் சேர்கிறது.


avatar
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum