Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குண்டலினியும் தமிழ் மொழியும் -1

Go down

குண்டலினியும் தமிழ் மொழியும் -1 Empty குண்டலினியும் தமிழ் மொழியும் -1

Post by ram1994 Sun Dec 14, 2014 7:11 am

• பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
• உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
• உயிரின் படர் நிலைதான் மனம்.
• மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
• உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
• நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
• குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.

குண்டலினிக்கு, சிவயோகம் என்றும், வாசி யோகமென்றும், சுழியோகமென்றும், ராஜயோகமென்றும், அரசன் என்றும் சபையென்றும் பெயர் வழங்கப்படுகிறது. இவற்றை முறையாகச் செய்து தேர்ச்சி பெற்றால் காயசித்தியும் ஞானசித்தியும் வாய்க்கும் என்கிறார் கொங்கணவர் சித்தர் .

மனித உடலில் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதை இதற்க்கு முந்தைய பதிவில் படித்திரிப்பீர்கள் . அந்த மூலாதாரத்தில் குண்டலினி எப்படி இருக்கிறது என்பதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. அதாவது, நம் ஒவ்வொருவரின் உடம்பிலும் முதுகு தண்டின் அடியில் மூலாதாரத்தில், மூன்றரைச் சுருள்களாக முடங்கி உறங்கி கிடக்கும் பாம்பு போன்று குண்டலினி இருக்கிறது. அதன் முகம் கீழ் நோக்கி இருக்கிறது. அதன் வாலை அதன் வாய் கவ்விக்கொண்டிருக்கிறது.

இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.

குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!

ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல் சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில் 7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம் நாடிகளும், இடது கண்ணில் 2000ம் நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலது காதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500 நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும், பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும், முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம் நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலது கையில் 1500 நாடிகளும், இடது கையில் 1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும், பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில் 13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும் ஓடுகிறதாம்.

இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக அமைந்திருக்கின்றன.

இவை மனித உடலில் முறையே 1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு 4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு 7.உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம்.

இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.

சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.

ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.

தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.

இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum