Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வாழை தியானம் செய்வோம்

Go down

வாழை தியானம் செய்வோம்

Post by ram1994 on Sun Feb 15, 2015 8:21 pm

எந்த ஒரு மந்திரத்தையும் மூன்று பார்வைகள் ஒன்றிணைத்து தான் செய்ய வேண்டும். பள்ளி பாடங்களை மனப்பாடம் செய்யும்போது இந்த மூன்று பார்வையும் ஒருங்கிணையும்போது தான் பாடங்களை கவனிக்கும் ஆற்றல் உண்டாகும். அப்போதுதான் மனப்பாடம் ஆகும். ஒன்றை கூர்ந்து கவனிக்கும்போது தன்னாலேயே இந்த நிகழ்வு அறியாதவருக்கும் உண்டாகும். இந்த பாடங்கள் வலதுபக்க மூளையில் மறவாத சக்தியாக பதியும்.

ஆனால் ஞான சக்தியை பெற இம்முறை மட்டுமே போதாது. கூடுதலாக கீழ்நிலை முக்கோணத்தின் சக்ரா சக்தியும் துணை வேண்டும். மிக அழுத்தமான மூன்று பார்வை நோக்கும், மிக ஆழமான ஒற்றை சிந்தனையும், சுழிமுனை வாசியும் இந்த சாதாரண உடலை மந்திர உடலாக மாற்றுகிறது.


புதிதாக பயிற்சி செய்யும்போது நம் கிரகசக்திகளும், கர்ம பாவ புன்னிய பதிவுகளும் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் மாறிமாறி செயல்படும். நாம் சுவாசிக்கும் காற்று நம் உடலில் 18 இடங்களில் பதிவை உண்டாக்குகிறது. இந்த பதிவு இடங்களை அடங்கல் என கூறுவார்கள். அந்த அடங்களில்தான் நவகிரகம் மற்றும் வானசக்தியும் நம் முன்னோர் பாவபுண்ணிய சக்தியும் பதிந்து நம்மை செயல்படுத்துகின்றன. இவையோடு நம் மனமும் இணைந்துவிடும். அதனால் நம்மை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லாமல் வெளிசக்தியின் ஆளுகையில் வாழ்கிறோம். (நம் மனதை நாம் கட்டுப்படுத்தினால் அவைகளை நாம் ஆளலாம். அதனால்தான் மனம் போன போக்கில் போகக்கூடாது என்பார்கள். கிரகசக்தியின் இயல்புகள் நம் மனதை ஆளும் இதுவே மனம் போன போக்கில் ஈர்த்துச் செல்லும். இதை கட்டுப்படுத்த பழக வேண்டும்).


இவ்வாறு இருக்கையில் சுழிமுனை வாசியால் இந்த 18 அடங்களில் உள்ள தீயசக்திகளை அழிக்க முடியும். அதற்கு தொடர் பயிற்சியால் சில நாட்களிலேயே வெற்றி அடையலாம். அந்த வெற்றி கிடைக்கும் வரை நம் உடலில் சக்கராக்களின் இயக்கத்தினால் இடம்வலமாகவும் வலம் இடமாகவும் இரு பின்னப்பட்ட பாம்புகள்போல் வாசி எனும் சுழிமுனை சக்தி மேலே எழும்.அப்போது 18 அடங்களில் உள்ள நம் கிரக பாவபுண்ணிய பதிவுகள் அமைதியாக சிறுக சிறுக செயல்பட்டதை சீண்டிவிட்டாற்போல் ஆகி வேகமாக செயல்பட ஆரம்பித்துவிடும். இதனால் நம் குண செயல்பாடுகளில் சில தற்காலிக மாற்றம் உண்டாகும். கோபம், காமம் தூண்டப்படல், அவமானம் ஏற்படுவதாக உணர்தல், வெறுப்பு போன்றவை நம்மை தாக்கும். வெளியில் இருந்தும் சில பிரச்சனைகள் வரும்.
கர்மாவை தூண்டுவதால் இப்பிரச்சனைகளை சாதகன் யாராக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் அனுபவித்தேயாக வேண்டும். யாரோ சிலருக்கு மட்டும் திடீர் அதிஷ்டங்கள் உண்டாகும். இதை அறியாமல் வெறுப்புக்கோ அல்லது காமத்திற்கோ இசைந்து தன் பயிற்சி எனும் விரதத்தை விட்டு விலகுபவர்கள் ஏராளம்பேர் உள்ளனர்.

நாம் பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்யும்போது இந்த இடம் வலம் அலைபாயும் கர்ம தொடர்புகளான கிரகங்கள், பாவ புண்ணிய பதிவுகள் ஒருநிலைக்கு வரும் அப்போது எந்த தாக்கமும் நமக்கு தெரியாது. எல்லாம் சமநிலைக்கு வந்துவிடும்.

((பயிற்சி தொடங்கிய சில நாட்களிலும் பயிற்சி நன்றாக செய்துவிட்டு பிறகு மனம் மாறி பயிற்சிபோதும் என விட்டுவிடும் சில நாட்களிலும் இந்த உடல்மாற்றம் தவிர்க்க முடியாதது. இதனால் வெளிச்சக்தி தாக்கம் காமம், கோபம், வெருப்பு, அவமானம் உண்டாவது குறைந்தளவாவது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும்.
எனவே பயிற்சியை விட நினைப்பவர்கள் உடனடியாக விடக்கூடாது. பயிற்சி நேரத்தை சிறுக சிறுக குறைத்துக்கொண்டே வந்துதான் விடவேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களே உங்களுக்கு எதிர்ப்பாக மாறலாம். அதை நீங்கள் ஆரம்பகால கட்டத்தில் சந்திக்க வேண்டிவரும். அதை நீங்கள்தான் பெரிதுபடுத்தக்கூடாது. இந்த சங்கடமே வேண்டாம் என்று அக்காலத்தில் சாதகம் செய்ய விரும்பியவர்கள் உணவு பண்டங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தனியான மலை மற்றும் வனஇடங்களை நாடிச்சென்று சிலநாள் அங்கேயே தங்கி ஆரம்ப பயிற்சியை செய்து தன் உடல் மாற்றங்களை சகித்துக்கொண்டு இருந்தனர். உடல் சூட்டால் உண்டாகும் காமத்தை தடுக்க இருவேளையும் குளித்து உடல் சூட்டை தணித்துக் கொண்டார்கள். தனிமையான உயரமான இடம் சாதகம் செய்ய சிறந்த இடம்அதற்காகவும் அவ்விடத்தை நாடினார்கள்.))

      மேற்கண்ட ஆரம்ப பயிற்சிதான் வாலை தியானத்தின் முதல் நிலையாகும். வாலை அருள் என்பது நாம் பயிற்சியில் வெற்றி காண்பதாகும். வாலை சக்தியை பெற மந்திரங்களின் உதவியை நாடினால் எளிதாகும். வாலை என்பது உடலின் முக்கோண சக்திகளை சிறப்பாக செயல்பட வைத்து ஒரு தகுதியான உடல் தரத்தோடு இருப்பதாகும். உடலில் உள்ள அனைத்து சக்தி மையங்களையும் தன் மனக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து குறிப்பிட்ட சக்தி மையங்களை மட்டும் இயக்கக்கூடிய ஆற்றலும் அல்லது எல்லா சக்தி மையங்களையும் மந்திர ஒலியால் இயக்கக்கூடிய ஆற்றலும் கைவரப் பெறுதலும் வாலை சக்தி என்பதாகும். வாலை என்பது அனைத்திற்கும் பொதுவான சக்தி உடலாகும். அதாவது அஷ்டகர்மங்கள் எட்டு என அறிவீர்கள். மந்திர ஒலிகளும் பலநூறு என்பதை அறிவீர்கள். இவைகளை எல்லாம் இயக்க தகுதியான மந்திரஉடல் வேண்டும். அதை தயார்படுத்தி வைப்பதே வாலை சக்தி உடலாகும். இதைத்தான் சித்தர்கள் அனைத்தையும் தன் உடலில் அடக்கியிருக்கும் ஆதிபராசக்தியே வாலை என்றார்கள். இதனால்தான் வாலையை தொடாத சித்தர்களே இல்லை என்பார்கள். அதாவது ஆரம்ப பயிற்சி பெறாமல் எவரும் சித்துக்களை பெற முடியாது என்று அர்த்தமாகும் .

மனம், ஆழ்மனம் என இரண்டுண்டு. இதில் மனம் சஞ்சலப்படக்கூடியது. இது புற வாழ்க்கைக்கு மட்டுமே லாயக்கானது. ஆழ்மனம் மட்டுமே ஆற்றல்களை பெறும் தகுதி வாய்ந்தது. இது மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றது. இந்த ஆழ்மனதை நம் நெற்றிக்கண்ணுக்கு நிலையாக இருக்க முன் நிறுத்தினால் பல அதிசயத்தக்க நிகழ்வுகளையும் தகவல்களையும் தருவதோடு சித்த சாதனை செய்ய வைக்கும். ஆக இந்த ஆழ் மனதை நாம் முன்நிறுத்த முயற்சிக்கும்போது மனமானது பல இன்னலான கேள்விகளை கொடுத்தும் புதிய புதிய சந்தேகங்களை உண்டுபண்ணியும் ஆழ் மனதை செயல்பட விடாதபடி தடுக்கப்பார்க்கும். இந்த மனதை அமைதிப்படுத்த ஒரே வழி புற ஆசையை வெறுக்க வேண்டும். அல்லது ஒதுக்க வேண்டும். ஆசைகளிடம் மனம் போகாமல் மனதைக் கொண்டே மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதை செய்தால் மனமானது ஆழ்மனம் முன்வந்து ஆக்ஞா சக்கரத்தில் நிலைத்து நிற்க தடை செய்யாது. ஆழ்மனம் வந்து நின்றுவிட்டால் அதில் எந்த சக்தியை அழைத்தும் பேசமுடியும்.இதுதான் வாலை.

நீங்கள் எந்த சக்தியை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த உருவத்தை நினைத்து தியானிக்கிறீரோ, எந்த மந்திரத்தை நினைத்து தியானிக்கிறீரோ அவையெல்லாம் உங்கள் விருப்பம். ஆனால் ஆழ் மனம் ஆக்ஞா முன்வந்து நின்றால் மட்டுமே பலன்.
இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தெய்வ உருவம், யந்திரம், மந்திரம், விளக்கு பார்த்தல், கரும்புள்ளி பார்த்தல் எல்லாமே ஆழ்மனதை முன் நிறுத்தத்தான். யார் யாருக்கு எதன்மேல் பிரியமோ? எதன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையோ, எதை மனம் ஏற்கிறதோ அவையெல்லாம் ஆழ் மனதை பாதிக்காதவை ஆகும்.

எனவே ஆக்ஞாவில் பிடித்ததை வைத்து உற்று நோக்கும் போது ஆழ் மனம் அமர்ந்து நிலைத்து விடும். இந்த ஆழ்மனதால் மட்டுமே நெற்றிக்கண் திறக்க முடியும். ஆழ் மனதில் மட்டுமே தெய்வ சக்தியாகட்டும், அசுப சக்தியாகட்டும் எதுவுமே வந்து பேச முடியும். இதுதான் வாலையின் பரிபூரண இரண்டாம் நிலை அருளாகும்.

நம் மனம் எந்த மதத்தை ஏற்கிறதோ, எந்த தெய்வத்தை விரும்புகிறதோ, எந்த மந்திரத்தின்மேல் பிரியம் உண்டாகிறதோ எடுத்து கையாளலாம் தவறில்லை. எடுத்துக்கொண்டதை கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் மாற்றம் செய்யாமல் கையாள வேண்டும். இது முக்கியம்.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum