Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


காகபுசுண்டர்

Go down

காகபுசுண்டர்

Post by ram1994 on Tue Feb 10, 2015 2:30 am

காக புசுண்ட சித்தர். காக்கை உருவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தவர். ஒரு சமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் கூடி இருந்தனர். சிவபெருமான் அங்கு கூடி இருந்தவர்களிடம் "இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம் தெரியுமா'' என்றார்.

எல்லோரும் மவுனமாக இருக்க "இதற்கு திருமாலே பதில் சொல்வார்'' என்றார். அவரும் பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளிகொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. என் சார்பாக என்னுடைய சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.


ஆனால் அப்பொழுது அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தை ஓடாமல் நிறுத்தி விட்டு அதை தாண்டிச் சென்றார். அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும் என்றார். சிவனும் புசுண்டரை அழைத்து அவரிடம் தன்னுடைய சந்தேகத்தை கூறினார். புசுண்டரும் தாம் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார்.


தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல் ஆழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களை கண்டதாகவும் கூறினார். காக புசுண்டர் யோகஞானம் சமாதி முறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய் தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூலில் கூறப்பட்டுள்ளன.


காகபுசுண்டர் திருச்சி உறைïரில் வாழ்ந்ததாகவும், அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காகபுசுண்டர் நவக்கிரகங்களில் குருபகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் குரு பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும். பணப்பிரச்சினை, புத்திர பாக்கியக் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினைகள் ஆகியவையாவும் அகலும்.


வியாபாரத்தில் எதிர்பாராத பண நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை ஆகியவை அகன்று லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் பிரச்சினை, அதனால் ஏற்படும் வழக்குகள் அகலும்.


அரசாங்கத்தால் பிரச்சினை, அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினை ஆகியவை நீங்கும். வறுமை அகன்று வாழ்க்கை வளம்பெற இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விசேஷப்பலன்கள் கிடைக்கும். இவரை வழிபட சிறந்த நாள் வியாழன்.


தற்போது இவர் வங்காள விரிகுடா கடலில் தவம் செய்து கொண்டிருக்கிருக்கிறார்.2004 ம் ஆண்டு சுனாமி வந்ததன் காரணமும் இவரே.அப்போது 1970,80 களில் கடற்க்கரை சாலையோரம் பல பாவ செயல்கள் நடந்தேறியதால் ,அந்த பாவ காந்த அதிர்வலைகள் காகபுசுண்டரை தாக்கி தவத்தை கலைத்த்தது.அவர் கோபா ஆவேசத்தில் பொங்கி எழுந்த சீற்றமே சுனாமி வர காரணம் ஆயிற்று.லட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்தது.

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum