Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பது இதுதான்!

Go down

இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பது இதுதான்! Empty இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பது இதுதான்!

Post by oviya Mon Jan 12, 2015 1:31 pm

அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கான ராசி பலன்கள்,
மேஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் உலவுகிறார். புதன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.

பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்ப்புக்கள் விலகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

பயணத்தின் மூலம் காரியத்தில் வெற்றி கிடைக்கும். உற்றார், உறவினர்களது தொடர்பு பயன்படும். விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் பெயரும் புகழும் பெறுவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

சிவப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். 15-ஆம் திகதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசாங்க உதவி கிடைக்கும். தந்தை நலம் சீராகும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிர்வாகத் திறமை கூடும்.

புதிய பதவிகளும், பட்டங்களும் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுபவர்களுக்கு அதிகம் பயன் கிடைக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 9-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் புதிய நிலம், மனை, வீடு, வாகனம் ஆகிய சொத்துக்கள் சேரும்.

சொத்துக்களால் வருவாயும் கிடைத்துவரும். நண்பர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும்.

மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். 5-ல் ராகு இருப்பதாலும் குரு வக்கிரமாக உலவுவதாலும் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.

சூரியன் 8-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும்.

15-ஆம் திகதி முதல் சூரியன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் புதிய பொருட்சேர்க்கை நிகழும்.‘

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும். மக்கள் நலம் சீராகவே இருந்துவரும்.

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். எதிர்பாராத பொருள் கைக்கு வந்து சேரும். மறைந்த, தொலைந்த பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். த்யானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.

பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகினால் நலம் கூடப் பெறலாம். பெற்றோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். 15-ஆம் திகதி முதல் சூரியன் 8-ஆமிடம் மாறுவதால் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.

உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் அதன் மூலம் பயன்பெறவும் சந்தர்ப்பம் கூடிவரும்.

புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களது நிலை உயரும்.

போக்குவரத்து இனங்கள் ஆக்கம் தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அலைச்சல் வீண்போகாது. செவ்வாய் 8-ல் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.

எதிலும் அவசரப்படாம்ல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. சகோதரர்களின் நலனில் கவனம் தேவைப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். கெட்ட எண்ணங்களுக்கும், கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் அளவோடு நலம் உண்டாகும். எதிலும் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. குடும்ப நலனில் கவனம் தேவைப்படும்.

வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். அலைச்சல் அதிகமாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். பேச்சின் மூலம் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஃபுட் பாய்ஸன் ஆகலாம். விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட் நேரலாம் என்பதால் விழிப்புத் தேவை.

வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் கலைஞர்களுக்குப் பிரச்னைகள் சூழும். ஆசை, அபிலாஷைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்களால் ஆடவர்களுக்குச் சங்கடம் உண்டாகும். 15-ஆம் திகதி முதல் ராசிநாதன் சூரியன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கச் சந்தர்ப்பம் உருவாகும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 5-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும், 11-ல் குருவும் உலவுவதால் சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.

அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய பயனைப் பெறுவார்கள்.

கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மக்களால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

குடும்ப நலம் சிறப்பாக இருந்துவரும். சுப காரியங்களும் நிகழும். எதிரிகள் விலகிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். பூர்விகத் தொழில் லாபம் தரும்.

வாரப் பின்பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறுவதுடன், புதிய பொருட்களின் சேர்க்கையும் நிகழும். 15-ஆம் திகதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவதால் மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

துலாம்

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் புதனுடன் கூடி 4-ஆமிடத்த்ல் இருப்பது சிறப்பாகும். சூரியன், கேது ஆகியோரது சஞாரமும் அனுகூலமாக இருப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.

முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும்.

புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும்.

அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கேளிக்கை உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களால் பாராட்டப்படுவீர்கள். 12-ல் ராகு இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பயணத்தின்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.

ஆன்மிகவாதிகளுக்கும் தத்துவ ஞானிகளுக்கும் வரவேற்பு கூடும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதுடன் சிக்கனமாக இருப்பதும் அவசியமாகும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும்.

கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வேற்று மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பயணத்தால் அனுகூலம் ஏற்படும். புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் விஞ்ஞானிகள் புகழ் பெறுவார்கள். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும்.

வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. வியாபாரிகள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 15-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

அரசு உதவி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களுக்கு உரியவர் ஆவீர்கள். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். நிர்வாகத்திறமையால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

5-ல் கேது இருப்பதாலும் குரு வக்கிரமாக உலவுவதாலும் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

தனுசு

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும்.

குரு 8-ல் வக்கிரமாக உலவுவதால் அளவோடு நலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ அடிகோலப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். பேச்சாற்றல் பளிச்சிடும். முக வசீகரம் கூடும்.

தொலைதூரத் தொடர்பு பயன்படும். வேற்று மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது.

கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி காண வழிபிறக்கும். தர்ம குணம் வெளிப்படும்.

4-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இருப்பிட மாற்றம் சிலருக்கு ஏற்படும். 15-ஆம் திகதி முதல் செல்வ வளம் மேலும் பெருகும். வாக்கு வன்மை கூடும்.

மகரம்

உங்கள் ராசிநாதன் சனி 11-ல் இருப்பது விசேடமாகும். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள்.

இயந்திரங்கள், தாதுப் பொருட்கள், விளைபொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைத்துவரும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். மாதர்களது நிலை உயரும்.

செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பிறரால் போற்றப்படுவீர்கள்.

உடல்நலம் சீராக இருந்துவரும். வாழ்க்கை வசதிகள் கூடும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம சிந்தனை வளரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையைப் பெறுவீர்கள்.

கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 9-ல் ராகுவும் 12-ல் சூரியனும் உலவுவதால் தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

தலை, கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். அக்கம்பக்கத்தாரிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும். கோபம் அடியோடு கூடாது.

கும்பம்

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

நல்லவர்களின் தொடர்பு பயன்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும்.

நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும், ஜன்ம ராசியில் செவ்வாயும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம், எச்சரிக்கை தேவை.

பயணத்தின்போது விழிப்புடன் செயல்படவும். உடல்நலனில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வீண்வாதம் கூடாது. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை.

புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம். 15-ஆம் திகதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாருவது சிறப்பாகாது.

தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும்.

கண் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்துக்கு இடம் தரலாகாது.

மீனம்

உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் எதிர்ப்புக்கள் குறையும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது ஆதரவு கிடைக்கும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். உடன்பிறந்த சகோதரியால் நலம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

வீண்வம்பு, வழக்குகளில் பிரவேசிக்கலாகாது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரலாம்.

வாரப்பினபகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். மறதியால் அவதி ஏற்படும். கண், கால் மற்றும் வாயு சம்பந்தமான தொல்லைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum