Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மக்­களின் தீர்ப்­பினை ஏற்­றுக்­கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது!

Go down

மக்­களின் தீர்ப்­பினை ஏற்­றுக்­கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது! Empty மக்­களின் தீர்ப்­பினை ஏற்­றுக்­கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது!

Post by oviya Sat Jan 10, 2015 12:39 pm

7வது ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­யீட்­டி­யுள்ளார். நேற்று முன்­தினம் நடை­பெற்ற தேர்­தலில் பெரும்­பான்­மை­யான மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். இதனால் 51.28 வீத வாக்­கு­களைப் பெற்று அவர் வெற்­றி­பெற்­றுள்ளார்.
நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த ­தே­சப்­பி­ரி­யவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளதுடன் புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றுள்ளதுடன் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக்ச தனது இரண்­டா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இன்­னமும் இரண்டு வரு­டங்கள் இருக்­கின்ற நிலையில் தனது மூன்­றா­வது பத­விக்­கா­லத்­திற்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார்.

இந்த தேர்­த­லிலும் இல­கு­வாக வெற்­றி­யீட்ட முடியும் என்று எண்­ணியே அவர் இந்தத் தேர்­த­லுக்­கான அறி­விப்­பினை விடுத்­தி­ருந்தார்.

2005ம் ஆண்டு இடம் பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக்சவும் போட்­டி­யிட்­டி­ருந்­தனர். இந்த தேர்­தலின் போதும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கு­மி­டையில் கடும் போட்டி நில­வி­யது.

இத்­தேர்­தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களை வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­த­லைப்­ பு­லிகள் தடை விதித்­தி­ருந்­தனர். இதன் கார­ணத்­தினால் ஜனா­தி­ப­தி­யாக மஹிந்­த ரா­ஜ­பக்ச தெரி­வா­கி­யி­ருந்தார்.

2010ம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லிலும் மஹிந்­த­ ரா­ஜ­பக்சவுக்கு எதி­ராக முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா போட்­டி­யிட்டார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து நாட்டில் சிங்­கள மக்கள் யுத்த வெற்­றிக்­க­ளிப்பில் இருந்­தனர். இதனால் இல­கு­வா­கவே ஜனா­தி­ப­தி­யாக மஹிந்­த­ ரா­ஜ­பக்ச தெரிவு செய்­யப்­பட்டார்.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு அமுலில் இருந்த 17வது திருத்தச் சட்­டத்­தினை இல்­லாது ஒழித்து 18 வது திருத்தச் சட்­டத்­தினை கொண்­டு ­வந்­ததன் மூலம் ஒருவர் எத்­தனை தரம் வேண்­டு­மா­னாலும், ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் நிலை உரு­வா­னது. இதற்­கி­ணங்­கவே இந்தத் தேர்­தலில் மஹிந்­த ரா­ஜ­பக்ச போட்­டி­யிட்­டி­ருந்தார்.

இத்­தேர்­தலில் தனக்கு எதி­ராக எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே போட்­டி­யி­டுவார் என்ற எதிர்­பார்ப்பு மஹிந்­த­ ரா­ஜ­பக்சவிடம் காணப்­பட்­டது.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியின் செய­லா­ள­ரா­கவும், சுகா­தார அமைச்­ச­ரா­கவும் இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணிக்கு மாறி பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­குவார் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜபக்ச கனவிலும் நினைத்­தி­ருக்­க­வில்லை.

பொது எதி­ரணி வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல­ உ­று­மய, ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ், தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக மக்கள் முன்­னணி ஆகிய கட்­சிகள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தன.

இத­னை­விட வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும் எதி­ரணி வேட்­பா­ளரை ஆத­ரித்­தி­ருந்­தது.

உண்­மை­யி­லேயே அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த சிறு­பான்மை கட்­சி­களும், தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுத்­த­மைக்கு கார­ணங்கள் இல்­லாமல் இல்லை.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­ வ­ரப்­பட்­டது. அந்த யுத்­தத்தில் தமிழ் மக்கள் தமது உயிர்­க­ளையும், உடமை­க­ளையும் இழந்து பேர­வ­லத்­திற்கு உள்­ளா­கினர்.

இவ்­வாறு நிர்­க்கதி­யான தமிழ் மக்கள் தமது வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது பெரும் கஷ்­டப்­பட்­டனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் காணி சுவீ­க­ரிப்­புக்­களும் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களும் இடம்பெற்­றன.

தமி­ழர்­க­ளது இன விகி­தா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்கும் வகை­யி­லான திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களும் இடம்பெற்று வந்­தன. அதி பாது­காப்பு வலயம் என்ற பெயரில் படைத்­த­ரப்­பி­னரால் சுவீ­க­ரி­க்கப்­பட்­டி­ருந்த காணிகள் மீளவும் பொது மக்­க­ளிடம் வழங்­கப்­ப­ட­வில்லை. வலி­காமம் வடக்கில் 6300 ஏக்கர் பொது மக்­களின் காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­டன.

இதனை விட வட­மா­காண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்ட போதும் அந்த மாகாண சபை நிர்­வா­கத்தை கூட்­ட­மைப்பு பொறுப்­பேற்­றுக் ­கொண்­டதன் பின்னர் சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்­டன.

வட­மா­காண ஆளு­ந­ராக பதவி வகிக்கும் படைத்­த­ரப்பு அதி­கா­ரியை நீக்கி அவ­ரது இடத்­திற்கு சிவில் நிர்­வாக அதி­கா­ரியை நிய­மிக்­கு­மாறும் வட­மா­காண சபையின் பிர­தம செய­லா­ள­ராகப் புதி­ய­வரை நிய­மிக்­கு­மாறும் கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் கூட்­ட­மைப்­பி­ன­ரது இந்தக் கோரிக்­களை நிறை­வேற்­றாத அர­சாங்கம் இழுத்­த­டிப்­புக்­க­ளையே மேற்­கொண்டு வந்­தது.

30 வ­ருட கால யுத்­தத்­திற்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை காண்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யினை முறித்துக் கொண்ட அர­சாங்கம் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்து விட்டு அந்தக் குழு­விற்கு வந்தால் மட்­டுமே பேச்­சு­வார்த்தை சாத்­தியம் என்று கூறு­கின்­றது.

இவ்­வாறு தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காணும் விட­யத்தில் இழுத்­த­டிப்புப் போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. இத­னா­லேயே அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் கூட்­ட­மைப்பு அதி­ருப்தி கொண்டு எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது.

இதேபோல் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்­சி­களும் எதி­ரணி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க ­வேண்­டிய கட்­டாய சூழலை முஸ்லிம் மக்கள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

கடந்த சில வரு­டங்­க­ளா­கவே முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட வகையில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்­டி­ருந்­தன.

தம்­புள்ளை பள்­ளி­வா­சலில் ஆரம்­பித்து கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன. ஹலால் சான்­றிதழ் வழங்கும் விவ­காரம் பெரும் பூதா­க­ர­மாக்­கப்­பட்டு அந்த நடை­மு­றையும் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. மாடு அறுக்கும் விவ­கா­ரத்­திலும் கூட பெரும் சர்ச்­சைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

திட்­ட­மிட்ட வகையில் பொது­ப­ல­ சேனா, இராவண பலய போன்ற அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்டு முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்­டன.

இதன் உச்­ச­க்கட்­ட­மாக தர்கா நகர், பேரு­வளை, அளுத்­கம பகு­தி­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக பெரும் வன்­முறை கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்­டது. இதனால் முஸ்லிம் மக்கள் தமது உயிர்­க­ளையும் உட­மைக­ளையும் இழந்து நிர்­க்கதி­யாகும் நிலை உரு­வா­கி­யி­ருந்­தது.

இவ்­வாறு முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள் அர­சாங்­கத்தின் மீது முஸ்லிம் சமூ­கமே அதி­ருப்தி கொள்ளும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் எதி­ர­ணியின் பக்கம் சென்று ஆத­ரவு வழங்­க­ வேண்­டிய கட்­டாயத் தேவை எழுந்­தி­ருந்­தது.

நடை­பெற்று முடிந்த தேர்­தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா­ஜ­பக்சவுக்கு சிங்கள பகுதிகளில் கணிசமான வாக்குக்கள் கிடைத்தே உள்ளன. பெருமளவான தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றே இருக்கின்றார்.

ஆனால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். இந்தத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளே எதிரணி வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.

இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இழைத்த தவறுகளே காரணமாக அமைந்திருக்கின்றன.

இந்தத் தேர்தல் பெறுபேறானது பேரினவாத சக்திகளுக்கு ஒரு படிப்பினையாகவே அமைந்திருக்கின்றது.

ஆனாலும், மக்களின் தீர்ப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா­ஜ­பக்ச பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகும். நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்கு இவரது இந்த செயற்பாடு வழிவகுத்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum