Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்- கனேடிய தமிழர் பேரவை, சைவ மகாசபை வாழ்த்து

Go down

கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்- கனேடிய தமிழர் பேரவை, சைவ மகாசபை வாழ்த்து Empty கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்- கனேடிய தமிழர் பேரவை, சைவ மகாசபை வாழ்த்து

Post by oviya Fri Jan 09, 2015 1:21 pm

எமது நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினையும் மதித்து எமது தேசியத்தின் உரிமைக்காகவும் காலத்தின் தேவை அறிந்து எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்குகளை மாரி மழை பொழிந்ததைப் போன்று அள்ளி வழங்கியதை இட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

நாம் தன்மானமுள்ள தமிழ் மக்கள் தான் என்பதை எமது தமிழ் மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். வடக்கு கிழக்கு வாழ் தன்மானத் தமிழர்களுக்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நானும் என்றென்றும் தலைவணங்குபவனாகவும், நன்றிக்குரியவர்களாகவும் இருப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

ஜனாதிதித் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பொது எதிரணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்தமைக்காக நன்றி தெரிவித்தே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…!

இந்த நாட்டில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தமை என்ற பேரில் எமது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை கொன்று குவித்த இந்த மஹிந்த அரசாங்கத்தினை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக களமிறங்கிய போதும் தாமதமாக எமது அறிவிப்பை விடுத்திருந்தும் காலத்தின் தேவை கருதி எமது மக்களும் மாற்றத்தினை நோக்கி அவர்களின் சிந்தனையை வெளிப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை இந்த நாடு அறியவும் தெரியப்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான மற்றுமொரு ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருப்பதையும் இட்டு பெருமிதம் கொள்கின்றேன்.

எமது தமிழ் மக்கள் மத்தியில் எத்தனையோ போலிப் பிரச்சாரங்கள் எத்தனை எத்தனையோ சலுகைகள் கொடுத்து அபிவிருத்தி அபிவிருத்தி என்று சொல்லி அவர்களை ஏமாற்றி வந்த இந்த மஹிந்த அரசாங்கத்திற்கும் அவருடன் இருந்த அடிவருடிகளுக்கு பாரிய பாடம் இன்று புகட்டப்பட்டுள்ளது.

எமது மக்களுக்கு தேவை சலுகை அரசியல் அல்ல கொள்கை அரசியலே என்பதை இந்த நாடும் இந்த உலகமும் இந்நாட்டின் பொரும்பாண்மை அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்கள் என்றென்றும் சோரம் போகாதவர்கள் ஒரு சில தேசியத்தைக் காட்டிக் கொடுத்தவர்களை வைத்து எமது மக்களை தீர்மானித்திருந்த இந்த அரசாங்கத்திற்கு எமது மக்கள் கொடுத்த பாரிய இடியே இந்த தேர்தல் முடிவு.

இன்று இந்த முழு உலகமுமே அறிந்திருக்கும் இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குப் பலத்தினை. இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் பாரிய சக்தியாக எமது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குப் பலம் தங்கியிருக்கின்றது. இதனை புதிய ஜனாதிபதி அவர்களும் உணர்ந்தே செயற்படுவார் என நம்புகின்றோம். ஏனெனில் நாட்டில் ஏனைய பகுதிகளை விட எமது வடக்கு கிழக்கு பகுதிகளினால் தான் வெற்றி நிச்சயிக்கப்ட்டுள்ளது என்பதுடன் இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் கொள்கைக்கும் கிடைத்த வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் எமது தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும் பாரிய அச்சுறுத்தல்களுக்குள் வாழும் எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு விடிவு கிட்டும் எமது உரிமைகள் தொடர்பில் ஒரு சிறந்த தீர்வு பெறப்பட வேண்டும் என்ற எண்ணமே எம் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. தமிழர்கள் வாழ்வில் விடியலுக்கான ஓர் ஒளிக்கீற்று தோன்றியிருப்பதாக நாம் நம்புகின்றோம்.

அது மட்டுமல்லாது மாற்றம் பெற்றுள்ள இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியினூடாக சர்வதேசமும் இந்திய அரசாங்கமும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர்களுக்கான உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

எனவே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் ஈடுபாடு வைத்து நாம் சொன்னதைக் கேட்டு இந்தத் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் அவர்களுக்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேன அவர்களை வெற்றிபெறச் செய்தது மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்த எமது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

மிகநெருக்கமான போட்டி நிலையில் நடந்தேறிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கனேடிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு கனேடிய தமிழர் பேரவை வாழ்த்து

சிறிசேனவின் இந்தத் தேர்தல் வெற்றி, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் சர்வாதிகார வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டி, புதிய ஜனநாயக சகாப்தத்துக்கான வாய்ப்புக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கனேடிய தமிழர் பேரவை.

இந்தத் தேர்தல் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர்.

தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தத் தேர்தலை ஆயிரக்கண்க்கான வாக்காளர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கான குறியீடாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்தப் புதிய ஆரம்பத்தின் உதயத்தில், இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளுக்கும் இடமளிப்பதன் மூலம் முழு நாட்டிலும் உண்மையான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முன்வருமாறு சிறிசேனவை கனேடிய தமிழர் பேரவை கோருகின்றது.

தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இலங்கைத் தீவில் வாழும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும் சமத்துவமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்கின்ற நிலையான தீர்வைக் காணவும், ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளுடன் சேர்ந்து உழைக்க முன்வருமாறு புதிய ஜனாதிபதியை நாங்கள் கோருகின்றோம்.

அரசுக் கட்டைமைவு அதிகாரத்தில் தாங்களும் அர்த்தமுள்ள வகையில் பங்களித்தல் வேண்டும் என்ற இலங்கையின் பல்வேறுபட்ட மக்களின் அபிலாஷை - எதிர்பார்ப்பு - கவனிக்கப்படவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை விரைந்து சீரமைக்கப்படவேண்டியுள்ளது. இதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, 18 ஆவது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழு முறைமையை மீள ஏற்படுத்தி, சட்டத்தின் ஆட்சியின் மேன்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிசேனவை நாம் விசேடமாக வேண்டுகிறோம்.

இந்த அதிகார ஆட்சிப் பீடத்தின் மாற்றம் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள பெறுபேறைத் தரவேண்டுமாயின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவற்றின் மீதான கெடுபிடிக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனக் கனேடிய தமிழர் பேரவை நம்புகின்றது. சர்வாதிகாரத்தை முறியடித்து, நம்பிக்கையை உருவாக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவற்காக பல்வேறுபட்ட கருத்துநிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படமுடியுமானால், தமது மக்களின் அடித்தளத்தில் கிடக்கும் அபிலாஷைகளை - ஆதங்கங்களை - கவனித்துத் தீர்ப்பதற்காக அனைத்து சமூகங்களும் அதேபோன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட முடியும் என கனேடிய தமிழர் பேரவை கருதுகின்றது.

முன்னைய மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நீண்டகாலம் காத்துக் கிடக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தப் புதிய ஆரம்பம் மூலம் கிட்டியிருக்கும் சந்தப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு கனேடிய தமிழர் பேரவை தொடர்ந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் குடிமக்களுக்கான நியாயம், சமத்துவம், நீதி, கௌரவம், சுதந்திரம் ஆகியவை பேணப்படுகின்ற வகையில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக உழைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணிக்கு எல்லாவிதத்திலும் உதவுவதற்கு கனேடிய தமிழர் பேரவை தயாராக உள்ளது - என்று உள்ளது

நல்லாட்சிக்கான வாழ்த்து

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தங்களை வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட இலங்கைவாழ் சைவத்தமிழர்கள் சார்பாக வாழ்j;துவதில் பேருவகை அடைகின்றோம்.

இந்த முக்கியமான வரலாற்றுத் திருப்பு முனையான சந்தர்ப்பத்தில் தாங்கள் இந்த வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த பங்களித்த மக்கள் குழுமங்களில் ஒன்றாகிய வடக்கு, கிழக்கு, மலையக சைவத்தமிழர்கள் சார்பாக சில விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

1. எவ்வித விசாரணையும் இன்றி நீண்ட காலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவரை விடுதலைசெய்து அவர்களின் குடும்பத்துடன் இணைந்துவாழ வழிசெய்தல்.

2. பலதாசாப்தங்களாக அகதிமுகாம்களில் வாழும் மக்களை பூர்வீக இடங்களில் மீள்குடியேற அனுமதிப்பதோடு அவர்களுடைய சுதேச மத தலங்களில் வழிபாடு செய்ய வழிவகைகளை செய்துகொடுத்தல்.

3. மண்சரிவு அபாயத்தை சந்தித்து ஆபத்துக்குள்ளான பிரதேசங்களில் வசித்துவரும் மலையக மக்களுக்கு உடனடியாக மாற்று இடங்களில் வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

இவற்றினை சீரிய முறையில் தங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைமுறைபடுத்துவதனூடாக சிங்கள் பௌத்தர்களுக்கும், சைவத் தமிழர்களுக்கும், இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்கள் குழுமத்தினருக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இந்த நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்தி எல்லோரும் சமஉரிமையுடன் பூர்வீக இடங்களில் வாழ வழிவகை செய்யுமாறு இறை சிவபெருமானைப் பிராத்தித்து நல்வாழ்த்துக்களை தங்களுடைய நல்லாட்சிக்கு தெரிவித்து நிக்கிறோம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum