Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பச்சை பயறு குழம்பு

Go down

பச்சை பயறு குழம்பு                Empty பச்சை பயறு குழம்பு

Post by oviya Sat Dec 05, 2015 10:12 am

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளிச்சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். புளித்தண்ணீரைச் சேர்த்து அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை இலேசாக மசித்து சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.


சூடான சாதத்துடன் பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum