Top posting users this month
No user |
Similar topics
ஓட்ஸ் பிசிபேளாபாத்
Page 1 of 1
ஓட்ஸ் பிசிபேளாபாத்
தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப்
நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி சேர்ந்த கலவை – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
புளி கரைசல் – கால் கப்
மோர் மிளகாய் – 2
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
உப்பு – சிறிதளவு.
பொடிக்க:
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 5
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
கசகசா – அரை டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு துண்டு
சோம்பு – அரை டீஸ்பூன்
கிராம் – 2
பட்டை – ஒரு பெரிய துண்டு
ஏலக்காய் – 2
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
துவரம் பருப்பை குழைய வேகவிடவும்.
ஓட்சை வெந்நீரில் ஊற வைக்கவும்.
காய்களில் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பொடிக்க வைத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்து பொடித்து கொள்ளவும்.
துவரம் பருப்பு, ஓட்ஸ், வெந்த காய்கறிகள், புளித்தண்ணீர், வறுத்து அரைத்த பொடி, உப்பு கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைத்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும், கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து கொட்டி கிளறவும்.
கமகமக்கும் ஓட்ஸ் பிசிபேளாபாத் ரெடி!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum