Top posting users this month
No user |
Similar topics
கோவைக்காய் கறி
Page 1 of 1
கோவைக்காய் கறி
தேவையான பொருள்கள்:-
கோவைக்காய் – 1/4கிலோ
கடுகு – 1ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி தழை – 1/4கப்
மஞ்சள் பொடி – 1சிட்டிகை
மிளகாய் தூள் – 2ஸ்பூன்
கடலை மாவு – 4ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் கோவைக்காயை நன்றாக கழுவி சின்னச் சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 3விசில் வைத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போடவும். அது நன்கு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
பின் அதில் மஞ்சள் பொடி, மிளகாய் தூள், கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் வெந்த கோவைக்காயை சேர்த்து 5நிமிடம் வரை குறைந்த தணலில் வதக்கவும். நன்கு வதக்கியவுடன் அடுப்பை அணைத்து கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும்.
சுவையான கோவைக்காய் கறி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum