Top posting users this month
No user |
Similar topics
பாலக் புலாவ்
Page 1 of 1
பாலக் புலாவ்
தேவையான பொருள்கள்:-
பாலக் கீரை – 2கப் பொடியாக நறுக்கியது
பாசுமதி அரிசி – 2கப்
வெந்தயம் – 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
தனியா தூள் – 1ஸ்பூன்
கிராம்பு, ஏலக்காய், பட்டை – 3நம்பர்
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3நம்பர்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் பாசுமதி அரிசியை 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்பு வெந்தயத்தை வாணலியில் நெய் விடாமல் சிவக்க வறுத்தெடுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளவும்.
நன்கு வதக்கிய பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள் , சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி 5நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.
பின்பு அடுப்பை அணைத்து தேவையான பொழுது எடுத்து பரிமாறவும்.
சுவையான பாலக் புலாவ் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum