Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் பச்சடி
Page 1 of 1
வெண்டைக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
சின்ன வெண்டைக்காய் – 1/4கிலோ
பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1கப்
சின்ன வெங்காயம் – 1/4கப்
நாட்டு தக்காளி – 1/4கப்
புளித்தண்ணீர் – 1/4கப்
சாம்பார் பொடி – 2ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
பெருங்காயத் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதை சின்ன துண்டுகளாக நறுக்கி தட்டில் பரப்பவும். அதனை வெயிலில் சிறிது நேரம் காய வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு பிசுபிசுப்பை தன்மை மறையும் வரை நன்கு வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்நிறமாக வதக்கவும். அதனுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், சாம்பார் பொடி, வதக்கிய வெண்டைக்காய், உப்பு சேர்த்து 1/4மணிநேரம் நன்கு கொதித்து மேலாக கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum