Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் மசாலா / கடாய் பிந்தி
Page 1 of 1
வெண்டைக்காய் மசாலா / கடாய் பிந்தி
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 20 – 25
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது )
தக்காளி – 2 நடுத்தரமானது (பொடியாக நறுக்கியது )
குடமிளகாய் – 1 பெரியது, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 – 4
முந்திரிப்பருப்பு – 10 – 12 விழுதாக அரைத்துக் கொள்ளவும்
மல்லித்தழை பொடியாக நறுக்கியது – 1 /4 கப்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்
சீரகம் – 2 தேக்கரண்டி
செய்முறை
வெண்டைக்காயை கழுவித் துடைத்து நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வழ வழப்பு போகும் வரை வதக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயின் நிறத்தை மாற்றி விட வேண்டாம்.
மற்றுமொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதனுடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
பின் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன்
வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய், உப்பு , சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நிறைய கிரேவி வேண்டுமெனில், பால் அல்லது நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வேக வைத்து, வதக்கி மீண்டும் மூடி போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்.
மல்லித்தழை தூவி ரொட்டி அல்லது புலாவுடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum